ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மத்திய வேளாண் விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகானை ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் திரு. பவன் கல்யாண் இன்று புதுதில்லியில் சந்தித்தார்
Posted On:
26 NOV 2024 7:43PM by PIB Chennai
மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், மாநில வேளாண் அமைச்சர்களுடன் அவர்களின் அமைச்சகங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதித்து அவற்றை விரைவாக தீர்க்க தொடர் கூட்டங்களைத் தொடங்கினார். ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் திரு. பவன் கல்யாண் புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகானை இன்று சந்தித்தார். ஆந்திர துணை முதலமைச்சர் தலைமையில் உயர்மட்டக் குழுவினர் அந்த மாநிலத்தில் வேளாண் துறை மற்றும் கிராமப்புற வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். கூட்டத்தில் ஆந்திராவில் விவசாயம், விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் பயனுள்ள விவாதங்கள் நடைபெற்றன.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, ஆந்திரப் பிரதேச மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய அமைச்சர் திரு சவுகான் கூறினார். மாநிலத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும், ஆந்திர பிரதேச மக்களுடன் துணை நிற்பதாகவும் அவர் உறுதியளித்தார். பிரதமர் கிராம சாலை திட்டம், பிரதமர் வீட்டுவசதி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் குறித்த பல்வேறு விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பிரதமரின் கிராம சாலைத் திட்டத்தின் கீழ் சாலைகள் அமைப்பதற்கு பிரதமர் ஜன்மான் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிப்பது குறித்தும் திரு சவுகான் விவாதித்தார். ஆந்திரப் பிரதேசத்தில் லட்சாதிபதி மகளிர் திட்டத்தின் வெற்றி குறித்தும் திரு பவன் கல்யாண் மத்திய அமைச்சரிடம் தெரிவித்தார்.ஆந்திரப் பிரதேசத்திற்கு வருகை தருமாறு மத்திய அமைச்சருக்கு திரு பவன் கல்யாண் அழைப்பு விடுத்தார். அதை அமைச்சர் மனதார ஏற்றுக்கொண்டார். அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
***
IR/AG/DL
(Release ID: 2077697)
Visitor Counter : 8