நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'அரசியலமைப்பு தினம்', 2024 “நமது அரசியலமைப்பு, நமது பெருமை” கொண்டாட்டங்கள்

Posted On: 26 NOV 2024 6:31PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் 2024 நவம்பர் 26-ம் தேதியை இந்தியா இன்று ஒரு வரலாற்று மைல்கல்லாக நினைவு கூர்ந்தது. 1949 நவம்பர் 26,  அன்று இந்திய அரசியலமைப்பு சபை முறையாக அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. இது 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்தியாவை ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசாக நிறுவியது. 1949-ம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை கௌரவிக்கும் வகையில், 2015-ம் ஆண்டில், மத்திய அரசு நவம்பர் 26-ஐ அரசியலமைப்பு தினமாக (சம்விதான் திவாஸ்) முறைப்படி அறிவித்தது. அப்போதிலிருந்து, ஆண்டுதோறும் இந்த நாளில், அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை நாடு கொண்டாடுகிறது.

75-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்கள்,  ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டாடப்பட உள்ளன. அரசியலமைப்பின் முகப்புரை, உங்களது அரசியல் சாசனத்தை அறிந்து கொள்ளுங்கள், அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட விதம் மற்றும் அரசியலமைப்பின் பெருமையைக் கொண்டாடுதல் ஆகிய நான்கு அம்சங்களாக இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.  இதன் முக்கிய விழா இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது.

குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில்

தேசிய கீதத்தைத் தொடர்ந்து மக்களவைத் தலைவர் வரவேற்புரையாற்றினார். அப்போது பேசிய மக்களவைத் தலைவர், அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களின், குறிப்பாக டாக்கர் பி ஆர் அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை சுட்டிக்காட்டினார். இந்த ஆவணத்தை உருவாக்குவதில் அவர்களது அர்ப்பணிப்பை எடுத்துரைத்த அவர், இவை நாட்டு மக்கள் அனைவரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077592 

----

TS/MM/KPG/DL


(Release ID: 2077692) Visitor Counter : 8


Read this release in: Urdu , English , Khasi , Hindi