பாதுகாப்பு அமைச்சகம்
குவாண்டம் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களின் செயல் விளக்கத்திற்கு டிஆர்டிஓ - ஐஐடி தில்லி ஏற்பாடு
Posted On:
26 NOV 2024 6:46PM by PIB Chennai
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ-வின் தொழிலக கல்வி உயர்சிறப்பு மையமும் ஐஐடி தில்லியும் இணைந்து, புதுதில்லியில் இன்று குவாண்டம் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இவ்விரு அமைப்புகளின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட குவாண்டம் தொழில்நுட்பம், பரந்து விரிந்த மற்றும் பாதுகாப்பான தொலைத்தொடர்பு அணுகுமுறைகளுக்கு மிகவும் அவசியமானது என்பதை இந்த செயல் விளக்கம் மூலம் நிரூபித்தனர்.
50 கிமீ கண்ணாடி இழை இணைப்பு கொண்ட ஆய்வகத்தில் இந்த செயல் விளக்கம் நடத்தப்பட்டது. ஐஐடி தில்லி வளாகத்தில் 8 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு கொண்ட கண்ணாடி இழை மூலமும் மற்றொரு கள பரிசோதனை நடத்திக் காட்டப்பட்டது. குவாண்டம் ஆராய்ச்சியின் மற்றொரு முன்முயற்சியாக, பிபிஎம்-92 நடைமுறையைப் பயன்படுத்தி, 20 மீட்டர் இடைவெளி கொண்ட 2 மேசைகளுக்கு இடையேயும் ஒரு செயல் விளக்கம் நடத்திக் காட்டப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077600
----
TS/MM/KPG/DL
(Release ID: 2077654)
Visitor Counter : 14