மக்களவை செயலகம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அர்த்தமுள்ள மற்றும் ஆக்கப்பூர்வ விவாதத்தில் மிக உயர்வான மரபை எம்.பி.க்கள் பின்பற்ற வேண்டும்: மக்களவை சபாநாயகர்
Posted On:
26 NOV 2024 5:21PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அர்த்தமுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதத்தின் சிறந்த மரபை உறுப்பினர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா கேட்டுக் கொண்டுள்ளார். அரசியல் நிர்ணய சபையின் புகழ்பெற்ற மரபுகளை நினைவுகூர்ந்த அவர், அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டிருந்தனர். ஆனால் ஒவ்வொரு பிரிவு குறித்தும் விவாதித்தனர். முழு கண்ணியத்துடனும் மரியாதையுடனும் தங்கள் உடன்பாட்டையும் உடன்பாடின்மையையும் வெளிப்படுத்தினர் என்று கூறினார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10-வது அரசியலமைப்பு தின விழாவில் வரவேற்புரை ஆற்றிய திரு பிர்லா, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் அர்த்தமுள்ள மற்றும் மரியாதைக்குரிய விவாதத்தின் இந்த உயர்ந்த மரபுகளை பின்பற்றுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வலியுறுத்தினார்.
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பாபா சாஹேப் அம்பேத்கரின் பங்களிப்பை நினைவுகூர்ந்த திரு பிர்லா, நமது சமூகத்தைப் பற்றிய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது என்று கூறினார்.
நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் உந்து சக்தியாக உள்ளது என்றும், கூட்டு முயற்சிகள் மற்றும் "கடமை காலத்தில்" பெரும் தீர்மானத்துடன் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற இலக்கை நோக்கி நாடு முன்னோக்கிச் செல்வதாகவும் அவர் கூறினார்.
"தேசம் முதலில்" என்ற உணர்வை வலுப்படுத்தும் வகையில், அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு நிகழ்வை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் பொதுமக்கள் பங்கேற்புடன் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும் என்றும் திரு பிர்லா வலியுறுத்தினார்.
அரசியலமைப்புச் சட்டம் ஒரு சட்ட வழிகாட்டி மட்டுமல்ல, விரிவான சமூக ஆவணமும் கூட என்று குறிப்பிட்ட திரு பிர்லா, ஜனநாயகத்தின் மூன்று தூண்களான சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றை பரஸ்பரம் ஒருங்கிணைப்பதன் மூலம் அரசியலமைப்பு சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்துள்ளது என்று குறிப்பிட்டார். இந்த 75 ஆண்டுகளில் இந்த மூன்று கிளைகளும் சிறப்பான முறையில் நாட்டுக்கு சேவை செய்துள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு சம்விதான் தினத்தின் கருப்பொருள் "நமது அரசியலமைப்பு நமது பெருமம"என்பதாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077510
-------
TS/MM/KPG/DL
(Release ID: 2077620)
Visitor Counter : 55