நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி படிமப் பகுதிகள் (கையகப்படுத்துதல் மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, 2024 குறித்த கருத்துகளை நிலக்கரி அமைச்சகம் வரவேற்றுள்ளது

Posted On: 26 NOV 2024 2:38PM by PIB Chennai

நிலக்கரி படிமப் பகுதிகள் (கையகப்படுத்துதல் மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, 2024-ல் முன்மொழியப்பட்ட வரைவு திருத்தங்கள் குறித்து பொதுமக்கள்  ஆலோசனை நடைமுறையின்  ஒரு பகுதியாக நிலக்கரி அமைச்சகம் பொதுமக்களிடமிருந்து கருத்துகள்/பின்னூட்டங்களை வரவேற்றுள்ளது.

நிலக்கரி படிமப் பகுதிகள் (கையகப்படுத்துதல் மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, 2024 மற்றும் தற்போதுள்ள விதிகளில் திருத்தம் செய்வதற்கு முன்மொழியப்பட்ட அட்டவணை மற்றும் அதற்காக முன்மொழியப்பட்ட திருத்தங்கள் https://coal.nic.in என்ற  அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

வரைவு மசோதா குறித்த கருத்துகளை dk.solanki[at]nic[dot]in மற்றும் arvind.kumar70[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் மூலம் 27.12.2024 -க்குள் அனுப்பலாம்.

 *****

TS/SMB/KV/KR


(Release ID: 2077555) Visitor Counter : 5


Read this release in: English , Urdu , Hindi