iffi banner
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் " கடந்த பத்தாண்டுகளில் திரைப்பட ஆடை அலங்காரம்" ஃபேஷன் ஷோ

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, ஆடை அலங்கார காட்சி நடைபெற்றது.

இந்த தனித்துவமான நிகழ்வு இந்திய சினிமாவின் பரிணாம வளர்ச்சியை ஆடை அலங்காரம் வழியாக சித்தரிக்கிறது. தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனத்தின் (என்ஐஎஃப்டி) மாணவர்களின் படைப்பாற்றல் இதில் வெளிப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 36 பிரத்யேக வடிவமைப்புகள் இடம்பெற்றன. அவை இந்திய சினிமாவின் ஆறு தனித்துவ காலகட்டங்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்தின் பாணியையும் உணர்வையும் இவை பிரதிபலித்தன. முதன்முறையாக, தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுடன் சிறப்புத் திறனாளிகள் நடந்து சென்று நிகழ்வுக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்தனர். இது நிகழ்ச்சிக்கு புதிய பரிமாணத்தைச் சேர்த்ததோடு ஃபேஷன் மூலமாக தனிநபர்களுக்கு தன்னுரிமையையும் வழங்கியது.

இந்திய சர்வதேச திரைப்பட விழா 2024-ல் நடைபெற்ற ஆடை அலங்கார காட்சிகளை நீங்கள் கீழே பார்க்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077110  

***

TS/IR/AG/KR

iffi reel

(வெளியீட்டு அடையாள எண்: 2077442) வருகையாளர் எண்ணிக்கை : 34
இந்த வெளியீட்டை படிக்க: English , Malayalam , हिन्दी , Konkani , Marathi , Kannada , Assamese , Urdu