தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
துணிச்சல் குறித்த எழுச்சியூட்டும் கதை: 55 வது சர்வதேச திரைப்பட விழாவில் பிரகாசிக்கும் 'அமெரிக்கன் வாரியர்'
55வது சர்வதேச திரைப்பட விழா உலகளவில் திரைப்பட ஆர்வலர்களை திறந்த மனதுடன் ஆரத்தழுவி வரவேற்கிறது. இத் திரைப்பட விழாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஸ்டாவோ மார்ட்டின் இயக்கியுள்ள அமெரிக்கன் வாரியர் திரைப்படம் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடுவாழ் இந்தியரின் வாழ்க்கை பயண மாற்றத்தை விரிவாக எடுத்துரைக்கிறது.
அமெரிக்கன் வாரியர் திரைப்படத்தின் கதை முன்னாள் குற்றவாளியும் தற்காப்பு கலை சண்டை வீரருமான ஜேயின் கதையாகும். ஒரு கொள்ளையைத் தடுத்தால் அவர் வாழ்க்கை மீட்சி பெற்றது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இந்த துணிச்சலான செயல் அவரை ஒரு மாபெரும் கதாநாயகனாக உருவெடுக்கச் செய்கிறது. இந்த படம் ஒரே மாதிரியான கருத்துக்களுடன் கூடிய திரைப்படங்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அத்திரைப்பட தயாரிப்பாளர்கள் இத் திரைப்படத்தை காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
-----
(Release ID: 2077170)
TS/SV/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2077438)
வருகையாளர் எண்ணிக்கை : 53