தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
அமைப்புசாரா மற்றும் தற்காலிக தொழிலாளர் நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான பொருளாதார சூழல்
இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2024 6:04PM by PIB Chennai
வயது முதிர்ந்த காலத்தில் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிரதமரின் ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM) என்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 2019 மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் சேர்வதற்கான வருமான உச்சவரம்பு 15,000 ரூபாயிலிருந்து, ரூ.18,000 ரூபாயாக உயர்த்தவும், வயது உச்சவரம்பு 18 முதல் 50 வயது வரை உயர்த்துவதற்கு மறுபரிசீலனை செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான விதிமுறைகள் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சமூக பாதுகாப்பு குறியீடு- 2020 -இல் வழங்கப்பட்டுள்ளன. ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு, சுகாதாரம் மற்றும் மகப்பேறு பலன்கள், முதியோர் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் சாலையோர தொழிலாளர்களுக்கு பொருந்தும் வகையில் சமூக பாதுகாப்பு அளிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இந்த குறியீடு உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076951
***
VS/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2077085)
வருகையாளர் எண்ணிக்கை : 73