சுற்றுலா அமைச்சகம்
கிராமப்புற சுற்றுலாவை மேம்படுத்துதல்
Posted On:
25 NOV 2024 6:11PM by PIB Chennai
நாட்டில் கிராமப்புற சுற்றுலாவின் அபரிமிதமான வாய்ப்புகளை அங்கீகரித்து, சுற்றுலா அமைச்சகம் இந்தியாவில் கிராமப்புற / சுற்றுலாவை மேம்படுத்தவும், கிராமப்புறங்களில் தங்கும் விடுதிகளை மேம்படுத்தவும் தேசிய உத்திகளை வகுத்துள்ளது.
சுற்றுலா அமைச்சகம், பல்வேறு முன்முயற்சிகள் மூலம் இந்தியாவை முழுமையான முறையில் மேம்படுத்துகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மற்றும் கிராமப்புற சுற்றுலா மற்றும் கிராமப் பகுதிகளில் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், சுற்றுலா அமைச்சகம் தனது ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், கிராமப்புற சுற்றுப்பாதைகளை கருப்பொருள் சுற்றுகளில் ஒன்றாக அடையாளம் கண்டுள்ளது.
சுற்றுலா மற்றும் சுற்றுலா மைய அணுகுமுறையைப் பின்பற்றி நிலையான மற்றும் பொறுப்பான இடங்களை உருவாக்கும் நோக்கத்துடன் ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், உத்தராகண்ட் மாநிலம் குஞ்சியில் ஊரக சுற்றுலா தொகுப்பு அனுபவத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
'பிரதமரின் பழங்குடியின முன்மாதிரி கிராம இயக்கத்தின்' ஒரு பகுதியாக, ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், பழங்குடியின இல்லங்களை மேம்படுத்தும் முயற்சிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 1000 இல்லங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய கட்டுமானப் பணிகளுக்கு ரூ.5 இலட்சம் வரையிலும், புதுப்பித்தலுக்கு ரூ.3 இலட்சம் வரையிலும், கிராம சமுதாயத் தேவைக்கு ரூ.5 இலட்சம் வரையிலும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
-----
MM/KPG/DL
(Release ID: 2077065)
Visitor Counter : 10