தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
இந்தியாவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் உலக சராசரியை விட குறைவு
Posted On:
25 NOV 2024 6:10PM by PIB Chennai
இந்தியாவில் வேலைவாய்ப்பு விகிதம் தொடர்பான அறிக்கையை மனிதவள மேம்பாட்டு நிறுவனம் (IHD) - சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் உலக அளவிலான சராசரியை காட்டிலும் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2021-ம் ஆண்டில் 15.6 சதவீதமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி உலக அளவிலான வேலைவாய்ப்பு மற்றும் சமூக கண்ணோட்டம் குறித்த தரவுகள்-2024- ன் படி, உலகளவில், 2023-ம் ஆண்டில், இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 13.3 சதவீதமாக இருந்தது.
தொழிலாளர்களின் சேம நல நிதி நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 2023-24-ம் ஆண்டில் 1.3 கோடிக்கும் கூடுதலான புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், செப்டம்பர் 2017-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, 7.03 கோடிக்கும் கூடுதலான சந்தாதாரர்கள் தொழிலாளர்களின் சேம நல நிதி நிறுவனத்தின் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டையும் அதிகரிக்கச் செய்வதில் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076956
***
VS/AG/DL
(Release ID: 2077060)
Visitor Counter : 13