அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பல்துறை இணைய வழி இயற்பியல் அமைப்புகளுக்கான தேசிய இயக்கத்தின் கீழ் குவாண்டம் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களை தொடங்குவது குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவிக்கவுள்ளது
Posted On:
25 NOV 2024 4:51PM by PIB Chennai
குவாண்டம் தொழில்நுட்பம் குறித்து புதிதாக உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை குவாண்டம் தொழில்நுட்பத் துறையில் புதிய தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அத்தியாவசிய வளங்கள், நிதி வாய்ப்புகள், வழிகாட்டுதல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை பெறுவதற்கான கட்டமைப்பை வழங்குகின்றன. மேலும் புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் நாட்டின் குவாண்டம் தொழில்நுட்ப சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கும் அதிகாரம் அளிக்கிறது..
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் மத்திய அமைச்சர் புத்தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கும், குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் வர்த்தகமயமாக்கல் நடவடிக்கைகளில் நாட்டின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் அமையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076900
***
TS/VS/KV/RR/DL
(Release ID: 2077041)