புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"இந்தியாவில் ஊதிய அறிக்கை: வேலைவாய்ப்பு குறித்த ஒரு கண்ணோட்டம் -செப்டம்பர், 2024" வெளியீடு

Posted On: 25 NOV 2024 3:30PM by PIB Chennai

தொழிலாளர் சேமநல நிதித் திட்டம், தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று பெரிய திட்டங்களின் கீழ் சந்தா செலுத்திய சந்தாதாரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், முறைசார் வேலைவாய்ப்புத் துறையில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர்  வரையிலான வேலைவாய்ப்பு எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

இதன் முழு அறிக்கையை இந்தியாவில் ஊதிய அறிக்கை வேலைவாய்ப்பு குறித்த ஒரு கண்ணோட்டம் -செப்டம்பர், 2024.pdf என்ற தகவல் குறிப்பில் அறியலாம்

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொழிலாளர் சேமநல நிதித் திட்டத்தின் கீழ்   சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 9,47,068 ஆகும். இது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 9,78,275 ஆக இருந்தது.  ஜூலை மாதத்தில்  இத்திட்டத்தில் புதிதாக இணைந்துள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1,117,481 என்ற அளவில் இருந்தது.

 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தின் கீழ் புதிதாக பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 15,02,964 ஆகும். இது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 15,25,086 ஆக இருந்தது.

 2.3 தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS):

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துள்ள  சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 58,018 ஆக இருந்தது. இது  ஆகஸ்ட் மாதத்தில் 54,869 ஆக இருந்தது.

 

*****

TS/VS/KV/RR/DL


(Release ID: 2076950) Visitor Counter : 10


Read this release in: Urdu , Marathi , English