புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை எளிதாக பரப்புதல், தரவு பகிர்வு, தரவு மேலாண்மைக்கான இ-சங்க்யிகி தளம்
Posted On:
25 NOV 2024 3:56PM by PIB Chennai
நாட்டில் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை எளிதாக பரப்புவதற்கான விரிவான தரவு மேலாண்மை, பகிர்வு முறையை நிறுவும் நோக்கத்துடன் புள்ளியியல்-திட்ட அமலாக்க அமைச்சகம் இ-சங்க்யிகி (https://esankhyiki.mospi.gov.in ) என்ற தளத்தை தொடங்கியுள்ளது. மேலும், ஆய்வுகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த துல்லியமான நுண் விவரங்கள் ஆகியன https://microdata.gov.in/nada43/index.php/home என்ற பிரத்யேக இணையதளம் மூலம் வெளியிடப்படுகின்றன.
இ-சங்க்யிகி தளம் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தை கொண்டுள்ளது, இது தேசிய தரவு, பகுப்பாய்வு தளம் உட்பட பல்வேறு தளங்களின் தரவுகளை தடையின்றி அணுகுவதை உறுதி செய்கிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் புள்ளியியல் - திட்ட அமலாக்கத் துறை இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2076859)
TS/PLM/AG/RR
(Release ID: 2076901)
Visitor Counter : 12