குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குரு  தேஜ் பகதூர் ஜியின் ‘ தியாக தினத்தை’ முன்னிட்டு குடியரசு தலைவரின் செய்தி

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2024 5:12PM by PIB Chennai

 

குடியரசு தலைவர் திருமதி  திரௌபதி முர்மு, குரு தேஜ் பகதூர் தியாக தினத்தை முன்னிட்டு தமது செய்தியில் கூறியிருப்பதாவது:-

குரு தேஜ் பகதூர் ஜியின் தியாக தினத்தை முன்னிட்டு, அவருக்கு எனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன்.

குரு தேஜ் பகதூர் ஜி மனித நேயத்திற்காகவும் மதத்தின் பாதுகாப்பிற்காகவும் தமது உயிரைத் தியாகம் செய்தார். அவர் ஒரு சிறந்த ஆன்மீக வழிகாட்டி மற்றும் உண்மையான தேசபக்தர். சமுதாயத்தில் அன்பையும் ஒற்றுமையையும் வளர்த்தார். உண்மை மற்றும் நீதிக்காக போராட மக்களை ஊக்குவித்தார்.

குரு தேஜ் பகதூர் ஜியின் போதனைகளை ஏற்று, அவரது சிறந்த கொள்கைகளை நம் வாழ்வில் பின்பற்றுவோம்.’’

*****

PKV/KV

 

 

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2076361) வருகையாளர் எண்ணிக்கை : 227
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Malayalam