அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

வழிநடத்தப்படுவதிலிருந்து, இந்தியா தலைமை வகிக்கும் நிலையில் உள்ளது ; டாக்டர் ஜித்தேந்திர சிங்

Posted On: 23 NOV 2024 2:21PM by PIB Chennai

 

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனி பொறுப்பு); புவி அறிவியல், பிரதமர் அலுவலகம்அணுசக்தி, விண்வெளி, பணியாளர்கள், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியா இன்று உலகெங்கிலும் உள்ள மற்றவர்களை வழிநடத்தும் நிலையில் உள்ளதுஇது விண்வெளித் துறையின் முன்னேற்றம், உயிரி தொழில்நுட்பத்  தடுப்பூசி முன்னேற்றங்கள் மற்றும் சிஎஸ்ஐஆர் ஊதா புரட்சி ஆகியவற்றின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அறிவியல் மற்றும் புத்தாக்க ஆராய்ச்சி அகாமியின் 8- வது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், டாக்டர். ரகுநாத் . மஷேல்கர், பேராசிரியர். சமீர் கே. பிரம்மச்சாரி, பேராசிரியர். சுரேஷ் பார்கவா மற்றும் டாக்டர் திருமலாச்சாரி ராமசாமி ஆகிய  நான்கு புகழ்பெற்ற விஞ்ஞானிகளுக்கு டாக்டர் ஆஃப் சயின்ஸ் பட்டங்களை டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கினார் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அவர்களின் அற்புதமான பங்களிப்பை அங்கீகரித்து இந்த பட்டங்கள் வழங்கப்பட்டன.

பாலிமர் அறிவியல் மற்றும் பொறியியலில் புகழ்பெற்ற நபர், டாக்டர். மஷேல்கர் தனது முன்னோடி ஆராய்ச்சி மற்றும் சிறப்பான தலைமைத்துவத்திற்காக கௌரவிக்கப்பட்டார். மரபணுவியலில் நிபுணராக  அங்கீகரிக்கப்பட்ட பேராசிரியர் பிரம்மச்சாரிஉடல்நலம் மற்றும் நோய்களில் மீண்டும் மீண்டும் டிஎன்ஏ பங்கு பற்றிய அவரது பணிக்காக விருது வழங்கப்பட்டது. பேராசிரியர். பார்கவா வேதியியல் அறிவியல் மற்றும் பொறியியலில் அவர் செய்த அற்புதமான பங்களிப்புகளுக்காக இந்த விருது பெற்றார். டாக்டர். ராமசாமி குரோமியம் வேதியியலில் தனது ஆரம்ப ஆராய்ச்சிக்காகப் பாராட்டப்பட்டார், இது கல்வி மற்றும் தொழில்துறையில் புதுமையான தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகளுக்கு வழிவகுத்தது.

பட்டம் பெற்ற அறிஞர்களிடம் உரையாற்றிய  டாக்டர்  ஜிதேந்திர சிங், இடைநிலைக் கற்றலை வளர்ப்பதில், தொழில்துறை-கல்வித்துறை ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில், மற்றும் உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தரவரிசையில் இந்தியாவின் உயர்வை உயர்த்துவதில் அகாடமியின் பங்கை எடுத்துரைத்தார்.

ஒப்பீட்டளவில் இளம் நிறுவனமாக இருந்தபோதிலும், உலகளாவிய பல்கலைக்கழகங்களில் முதல் 3% பட்டியலில் இடம்பிடித்ததற்காக இந்த நிறுவனத்தை அமைச்சர் பாராட்டினார். பொறியியல், உயிரியல் மற்றும் தகவல் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் விவசாயம் போன்ற வளர்ந்து வரும் துறைகளுடன் ஒருங்கிணைக்கும் அதன் புதுமையான மாதிரியே இந்த வெற்றிக்கு காரணம் என்று அவர் கூறினார்.

டாக்டர். ஜிதேந்திர சிங், விண்வெளி மற்றும் உயிரித் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் பகுதிகளில் வெற்றிக் கதைகளையும் எடுத்துரைத்தார். விண்வெளி ஸ்டார்ட்அப்களின் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருந்து 300க்கு மேல் இந்தியா முன்னேறியுள்ளது, அதே நேரத்தில் பயோடெக்னாலஜி துறை இப்போது கிட்டத்தட்ட 9,000 ஸ்டார்ட்அப்களைக் கொண்டுள்ளது, இது நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது.

 தேசியக் கல்விக் கொள்கை 2020ன் கொள்கைகளை விளக்கிய அவர்இது மாணவர்களுக்கு அவர்களின் கல்வி நோக்கங்களில் இணையற்ற நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. பயோடெக்னாலஜி மற்றும் பொருளாதாரம் போன்ற வழக்கத்திற்கு மாறான பாடங்களை மாணவர்கள் ஒன்றிணைக்கும் நிகழ்வுகளை அவர் பகிர்ந்து கொண்டார், இது இந்திய கல்வியில் ஒரு புரட்சிகரமான படி என்று கூறினார். “உலகளாவிய தொழில்நுட்பங்களைப் பின்பற்ற இந்தியா இனி காத்திருக்காது; நாங்கள் இப்போது அவர்களின் வளர்ச்சியை வழிநடத்துகிறோம், ”என்று அவர் அறிவித்தார்.

இந்தப்  பட்டமளிப்பு இந்தியாவின் வளர்ந்து வரும் அறிவியல் திறனையும், அறிவு சார்ந்த பொருளாதாரத்தை வளர்ப்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் பிரதிபலித்தது. புதுமை, தொழில்முனைவு மற்றும் கல்விசார் சிறப்பு ஆகியவற்றைக் கலப்பதன் மூலம், கல்வி  நிறுவனங்கள் கல்வியை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைவராக இந்தியாவை உருவாக்குவதற்கான பாதையை வடிவமைக்கின்றன. டாக்டர். ஜிதேந்திர சிங்கின் உரை இந்த தொலைநோக்குப் பார்வையை அடிக்கோடிட்டுக் காட்டியது,

*****

PKV/KV

 

 

 

 


(Release ID: 2076321) Visitor Counter : 11


Read this release in: English , Urdu , Hindi