வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குவாலியரில் உள்ள கோசாலை, இந்தியாவின் முதல் நவீன, தன்னிறைவு பெற்றுள்ளது

Posted On: 22 NOV 2024 12:57PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த அக்டோபர் 2-ந் தேதி,  குவாலியரின் புதிய கால்நடைச் சாண அடிப்படையிலான உயிரிவாயு நவீன ஆலையைத் திறந்து வைத்தார். இது "கழிவிலிருந்து செல்வம்" என்ற முன்முயற்சிக்கான அவரது தொலை நோக்குப் பார்வையை எடுத்துக்காட்டுகிறது.

இந்த சிபிஜி ஆலை, குவாலியரின் மிகப்பெரிய மாட்டுக் கொட்டகையான ஆதர்ஷ் கோசாலையில் அமைந்துள்ளது. இது குவாலியரின் லால்திபாராவில் உள்ளது. குவாலியர் மாநகராட்சியால் இயக்கப்படும் கோசாலையில் 10,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன.  இந்தியாவின் முதல் நவீன, தன்னிறைவு பெற்ற கோசாலையை நிறுவியதன் மூலம் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது. இது அதிநவீன அழுத்தப்பட்ட உயிரிவாயு (சிபிஜி) ஆலையைக் கொண்டுள்ளது. இது மத்தியப் பிரதேசத்தின் முதல் சிபிஜி ஆலை என்பது இதன் சிறப்பாகும். இதில் மண்டிகள் மற்றும் வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழக் கழிவுப்பொருட்கள், கால்நடை சாணம் மற்றும் குப்பைகளிலிருந்து உயிரிவாயு தயாரிக்கப்படுகிறது.

5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த லட்சியத் திட்டம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து ரூ.31 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. கோசாலையின் சிபிஜி ஆலை பெரும்பாலும் பயன்படுத்தப்படாத வளமான மாட்டு சாணத்தை உயிரிவாயுவாக மற்றும் கரிம உரமாக மாற்றுகிறது. கார்பன் உமிழ்வைக் குறைக்கும் அதே வேளையில் நீடித்த நிலையான நடைமுறைகளையும் ஊக்குவிக்கிறது. இந்த ஆலை 100 டன் கால்நடை சாணத்திலிருந்து தினமும் இரண்டு டன் அழுத்தப்பட்ட உயிரிவாயுவை உற்பத்தி செய்யும். கூடுதலாக, இது தினமும் 10-15 டன் உலர் உயிர் உரத்தை உற்பத்தி செய்கிறது. இது கரிம விவசாயத்தின் மதிப்புமிக்க துணைத் தயாரிப்பாகும். இந்த ஆலை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டது மட்டுமல்லாமல், நீண்ட கால நிலைத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பிரதான ஆலைக்கு அருகில் அமைந்துள்ள விண்ட்ரோ உரம் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளையும் உள்ளடக்கியது. இது மேலும் கரிம கழிவு செயலாக்கத்தை அனுமதிக்கும்.

மேலும், உள்ளூர் விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் நேரடியாக பயனடைவார்கள். உயிரி உரம் மலிவு விலையில் எளிதாகக் கிடைப்பதால், அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

லால்திபாரா கோசாலையின் சிபிஜி ஆலை ஒரு தொழில்துறை வசதியாக மட்டுமல்லாமல், பொருளாதார மற்றும் சமூக நன்மைகளுடன் சுற்றுச்சூழல் பொறுப்பை சமநிலைப்படுத்தும் ஒரு முழுமையான அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் முதல் தன்னிறைவு கோசாலை என்ற வகையில் இது மற்ற பிராந்தியங்களுக்கு ஒரு முன்னோடி முன்மாதிரியாகும்.

***

(Release ID: 2075883)
TS/PKV/RR/KR

 


(Release ID: 2075940) Visitor Counter : 17


Read this release in: English , Urdu , Hindi