நிதி அமைச்சகம்
கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து தேசிய சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை நிதிச் சேவைகள் துறை மேற்கொண்டது
Posted On:
21 NOV 2024 6:19PM by PIB Chennai
நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை (DFS), நாக்ரிக் #CyberJagruk கருப்பொருளுடன் தேசிய சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை (NCSAM) அனுசரித்தது, ஆன்லைன் தகவல்களைப் பாதுகாப்பது மற்றும் இணைய பாதுகாப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கான பகிரப்பட்ட பொறுப்பை இது வலியுறுத்துகிறது.
டிஜிட்டல் உலகில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குக் கற்பிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரச்சாரத்தின் மூலம், 2024 அக்டோபர் முழுவதும் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து NCSAM வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த முயற்சி, டிஜிட்டல் விழிப்புணர்வு கலாச்சாரத்தை வளர்ப்பதையும், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே இணைய சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதுடன், ஒவ்வொரு டிஜிட்டல் பயனாளியும் தங்கள் தரவைப் பாதுகாப்பதிலும் மீறல்களைத் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதை நினைவூட்டியது.
மேலும், இந்த துறை தனிநபர்களுக்கு கல்வி கற்பிக்கவும், ஈடுபடுத்தவும், அதிகாரம் அளிக்கவும் பல நிகழ்வுகளை நடத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075587
***
MM/RS/DL
(Release ID: 2075630)
Visitor Counter : 15