பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லாவோசில் நடைபெற்ற 11-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின்போது பாதுகாப்பு அமைச்சர், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அமைச்சர்களை சந்தித்தார்

Posted On: 21 NOV 2024 5:04PM by PIB Chennai

லாவோஸ் நாட்டின் வியன்டியானில் இன்று (2024 நவம்பர் 21) நடைபெற்ற 11-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின்போது,  அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு லாயிட் ஜே. ஆஸ்டின், கொரியக் குடியரசின் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு கிம் யோங் ஹியூன், ஆஸ்திரேலிய பாதுகாப்புத் தொழில் மற்றும் திறன் வழங்கல் துறை அமைச்சர் திரு பாட் கான்ராய் மற்றும் நியூசிலாந்து பாதுகாப்பு அமைச்சர் திருமதி ஜூடித் காலின்ஸ் ஆகியோரை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், சந்தித்தார்.

கொரிய குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பு

 இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பானது நேர்மறையான பாதையில் சென்று கொண்டிருப்பதையும் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள்  வலுவான இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் தேவை என்பதை அவசியமாக்குகிறது என்பதையும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன. பாதுகாப்புக் கொள்கை பேச்சுவார்த்தை (DPD) போன்ற நிறுவப்பட்ட வழிமுறைகள் மூலம் 2020 பிப்ரவரியில் கையெழுத்திடப்பட்ட 'பாதுகாப்பு தொழில் கழகத்திற்கான சாலை வரைபடத்தில்' இணைந்து பணியாற்ற இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

இரு நாடுகளின் பாதுகாப்பு உற்பத்தி சூழல் அமைப்புகள்

இணை உற்பத்தி மற்றும் கூட்டு மேம்பாட்டில் வளர்ச்சிக்கு பெரும் திறனைக் கொண்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார். இந்தியாவில் உற்பத்தி வசதிகளை அமைக்க கொரிய நிறுவனங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ள இந்தியாவின் பாதுகாப்பு வழித்தடங்களில் முதலீடு செய்யுமாறு கொரிய தரப்பினருக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்தியாவும் கொரியாவும் ஒரு சிறப்பு உத்திசார் கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன, இது சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது மற்றும் அடுத்த உயர் நிலைக்கு முன்னேறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது, கொரிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திரு கிம் யோங் ஹியூனுக்கு திரு ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு, தொழில் மற்றும் திறன் வழங்கல் துறை அமைச்சருடன் சந்திப்பு

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகிய பொதுவான நலன்களின் அடிப்படையில், இந்தியா-ஆஸ்திரேலியா ஒத்துழைப்பு அமைந்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் நினைவுகூர்ந்தார். கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மைல்கற்கள் குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்திய மற்றும் பாதுகாப்புத் துறை தொழில் நிறுவனங்கள் முக்கிய துறைகளில் ஒத்துழைக்கவும்,  பயன்படுத்திக் கொள்ளக்கூடிய  வாய்ப்புகளையும் திரு ராஜ்நாத் சிங், சுட்டிக் காட்டினார்.

வானிலிருந்தபடியே ஒரு விமானத்திலிருந்து மற்றொரு விமானத்திற்கு  எரிபொருள் நிரப்புவதற்கான ஏற்பாடுகள் இரு நாடுகளுக்கும் இடையே பரிமாறிக்கொள்ளப்பட்டன. இது இரு நாட்டு விமானப் படைகளுக்கு இடையேயான பரஸ்பர செயல்பாட்டை வலுப்படுத்தி, இருதரப்பு உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்ற நடவடிக்கையாக அமையும். இருதரப்பு மற்றும் பிராந்திய அளவில் ஒத்துழைப்பதன் மூலம் பாதுகாப்பு ஈடுபாடுகளை அடுத்த உயர் மட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

நியூசிலாந்து பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு

இந்தியா-நியூசிலாந்து உறவு, பகிரப்பட்ட ஜனநாயக மரபுகள், பொதுவான ஆட்சி நிறுவனங்கள், சட்டத்தின் ஆட்சி, ஆங்கில மொழி, கிரிக்கெட், மலையேறுதல் மற்றும் ஹாக்கி மீதான அன்பு மற்றும் அமைதியான, பாதுகாப்பான, வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியம் குறித்த பார்வையை பகிர்ந்து கொள்வதில் அடங்கியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் கூறினார். மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கடற்படை கப்பல்களின் வழக்கமான வருகைகள் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (டி.சி.ஏ) விரைவில் இறுதி செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். இந்தியாவின் வலுவான கப்பல் கட்டும் தொழில்துறையின் திறன்களை எடுத்துரைத்த அவர், இந்த முக்கியமான துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

***

TS/MM/RS/DL


(Release ID: 2075589) Visitor Counter : 17


Read this release in: English , Urdu