அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பெப்டைட் அடிப்படையில் சரிசெய்யக்கூடிய எந்திர தூண்டுதல்களுக்கு எதிர்வினையாற்றும் நானோ பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை ஆற்றல் சேமிப்பு மற்றும் உயிரி சாதனப் பயன்பாடுகளுக்கு உதவும்.

Posted On: 21 NOV 2024 4:10PM by PIB Chennai

அமினோஅமிலம் கொண்ட கம்பிகளின் (பெப்டைட்) சுய-சேர்ப்புப் பாதையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வெவ்வேறு நானோ கட்டமைப்புகளை இந்திய ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் உருவாக்கியுள்ளனர். சுய-சேர்ப்பு செயல்முறை மீதான இந்தக் கட்டுப்பாடு இயந்திர தூண்டுதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் பொருள் பண்புகளை சரிசெய்ய உதவுகிறது. ஆற்றல் சேகரிப்பு, உயிரிசாதனங்கள், மென்மையான ரோபோக்கள், நெகிழ்வான மின்னணு மற்றும் உணர்திறன் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய மின்சாரத் தன்மையை இது மேம்படுத்துகிறது.

அமினோ அமிலம் கொண்ட கம்பிகளின் சுய-சேர்ப்பு, தொழில்நுட்ப ரீதியாக சூப்பர் மூலக்கூறு சுய-சேர்ப்பு என்று அழைக்கப்படுகிறது, இது சிறிய மூலக்கூறுகளை பெரிய, கட்டமைக்கப்பட்ட அமைப்புகளாக தன்னிச்சையாக ஒழுங்கமைப்பதை உள்ளடக்கியது. எலக்ட்ரானிக்ஸ், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ்பயோமெடிசின் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் நானோ சாதனங்களை உருவாக்க இந்த செயல்முறை அடிப்படையானது.

மின் அழுத்த பொருட்கள் இயந்திர அழுத்தத்திற்கு உட்படுத்தப்படும் போது மின்சாரத்தை உருவாக்கும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ளன. இந்த பண்பு சென்சார்கள், ஆக்சுவேட்டர்கள் மற்றும் ஆற்றல் சேமிப்பு  சாதனங்களின் பயன்பாடுகளுக்கு ஏற்றதாக அமைகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு ஸ்மார்ட் பொருட்களின் செயல்பாட்டை மேம்படுத்துவது மட்டுமின்றி, தொழில்நுட்பம் மற்றும் பொருள் சார்ந்த அறிவியலில் முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும். சுகாதாரம் முதல் மின்னணுவியல் வரை பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

பெங்களூருவில் உள்ள நானோ மற்றும் சாஃப்ட் மேட்டர் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள்   பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளனர். இவை மத்திய  அறிவியல்தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனங்களாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075492

***

TS/SMB/AG/DL


(Release ID: 2075565) Visitor Counter : 19


Read this release in: English , Urdu