பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லாவோசில் நடைபெற்ற 11-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு

Posted On: 21 NOV 2024 2:55PM by PIB Chennai

"சுதந்திரமான கப்பல் போக்குவரத்து மற்றும் வான்வழிப் போக்குவரத்து, தடையற்ற சட்டபூர்வமான வர்த்தகம் மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான சர்வதேச சட்டங்களை கடைப்பிடிப்பதை இந்தியா வலியுறுத்துகிறது" என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்

நவம்பர் 21-ந் தேதி லாவோசின் வியன்டியானில் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்த விவாதங்களில் பங்கேற்காத நாடுகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களுக்கு குந்தகம் விளைவிக்காத ஒரு நெறிமுறையைக் காண இந்தியா விரும்புகிறது என்று கூறினார். இந்த நெறிமுறை சர்வதேச சட்டத்துடன், குறிப்பாக 1982-ம் ஆண்டு ஐ.நா கடல் மாநாட்டு சட்டத்துடன் ஒத்திசைந்ததாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

சமாதான சகவாழ்வுக்கான பௌத்த கோட்பாடுகள் அனைவராலும் மிகவும் நெருக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறினார். இது கடைபிடிக்கப்பட்டு வரும் உலக ஒழுங்கமைப்பில்  அழுத்தத்தை அதிகரிக்கிறது .

"சிக்கலான சர்வதேச பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தையை இந்தியா எப்போதும் ஆதரித்து நடைமுறைப்படுத்தியுள்ளது. திறந்த தகவல் தொடர்பு மற்றும் அமைதியான பேச்சுவார்த்தைக்கான இந்த உறுதிப்பாடு, எல்லைத் தகராறுகள் முதல் வர்த்தக ஒப்பந்தங்கள் வரை பரந்த அளவிலான சர்வதேச சவால்களுக்கு இந்தியா மேற்கொள்ளும் அணுகுமுறையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.  மனம் திறந்த உரையாடல், நம்பிக்கை, புரிதல் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது. நிலையான கூட்டாண்மைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது. பேச்சுவார்த்தையின் சக்தி எப்போதும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது உலக அரங்கில் ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்திற்கு பங்களிக்கும் உறுதியான முடிவுகளை அளிக்கிறது. நாடுகள் ஆக்கப்பூர்வமாக ஈடுபடும்போதும், ஒருவருக்கொருவர் முன்னோக்குகளை மதித்து, ஒத்துழைப்பு உணர்வில் பகிரப்பட்ட இலக்குகளை நோக்கி செயல்படும்போதும் மட்டுமே உலகளாவிய பிரச்சனைகளுக்கு உண்மையான, நீண்டகால தீர்வுகளை அடைய முடியும் என்று இந்தியா நம்புகிறது" என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

21-ம் நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டு என்று வர்ணித்த பாதுகாப்புத் துறை அமைச்சர், குறிப்பாக, ஆசியான் பிராந்தியம் எப்போதும் பொருளாதார ரீதியாக துடிப்பானதாகவும், வர்த்தகம், மற்றும் கலாச்சார நடவடிக்கைகளால் பரபரப்பானதாகவும் உள்ளது என்றார். இந்த மாற்றத்திற்கான பயணம் முழுவதிலும், இந்த பிராந்தியத்தின் நம்பகமான நட்பு நாடாக இந்தியா திகழ்கிறது என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசின் கிழக்கு நோக்கிய கொள்கையின் பத்தாண்டுகளை இந்தியா கொண்டாடுவது குறித்து பேசிய திரு ராஜ்நாத் சிங், ஆசியான் மற்றும் இந்தோ-பசிபிக் நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் கூறினார். நாட்டின் கொள்கையின் மைல்கல்லாக ஆசியானின் முக்கியப் பங்கை இந்த தொலைநோக்கு பார்வை மீண்டும் வலியுறுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.

11வது ஏடிஎம்எம் பிளஸ் மன்றத்தில் 10 ஆசியான் நாடுகள், எட்டு பிளஸ் நாடுகள் மற்றும் கிழக்கு தைமூர் ஆகியவை இருந்தன. இந்த கூட்டத்திற்கு லாவோஸ் துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் சான்சமோன் சன்யாலத் தலைமை தாங்கினார்.

***


(Release ID: 2075529) Visitor Counter : 12


Read this release in: English , Urdu , Hindi , Marathi