வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சிமெண்ட், கான்கிரீட் மற்றும் கட்டுமானப் பொருட்கள் குறித்த சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி
Posted On:
21 NOV 2024 2:00PM by PIB Chennai
சிமெண்ட், கான்கிரீட் மற்றும் கட்டுமானப் பொருட்கள் குறித்த 18வது சிமென்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களுக்கான தேசிய கவுன்சிலின் (என்சிபி) சர்வதேச மாநாடு & கண்காட்சி, 2024 நவம்பர் 27 முதல் 29 வரை துவாரகாவில் உள்ள யஷோபூமி, இந்தியா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறும். இதனை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (டிபிஐஐடி) நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களுக்கான தேசிய கவுன்சிலும் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகமும் இணைந்து நடத்துகிறது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், நவம்பர் 27-ந் தேதி மாலையில் நடைபெறும் சிறப்பு அமர்வின் போது, தலைமை விருந்தினராக கலந்து கொள்வார். சிமெண்ட் மற்றும் கான்கிரீட் துறையில் முன்மாதிரியான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் என்சிபி வாழ்நாள் சாதனையாளர் விருதையும் திரு கோயல் வழங்குவார்.
இந்த நிகழ்வு உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்களை ஒன்றிணைத்து சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்கள் துறையில் புதுமைகள் மற்றும் நிலைத்தன்மை பற்றி விவாதிக்கும். இந்த அமர்வின் போது, "சிமெண்ட் தொழில் - இந்தியா 2024" தொகுப்பு, மாற்று எரிபொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை மையமாகக் கொண்ட வெளியீடு மற்றும் சிமெண்ட் துறையின் 200 ஆண்டுகளைக் கொண்டாடும் குறும்படம் உள்ளிட்ட பல முக்கிய தயாரிப்புகள் வெளியிடப்படும். இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள், "நிகர பூஜ்ஜிய எதிர்காலத்தை உறுதிப்படுத்துதல்", 2070 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, இது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலை நோக்குப் பார்வையாகும்.
இந்த மாநாட்டில் குழு விவாதங்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற பேச்சாளர்களின் முக்கிய உரைகள் உட்பட விரிவான முறையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். அத்துடன் 220 தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படும். ஒரே நேரத்தில் 120-க்கும் மேற்பட்ட முன்னணியில் உள்ள உலகளாவிய மற்றும் இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தும்.
இந்த நிகழ்வு தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பொறியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்கள் துறையில் நிலையான வளர்ச்சி மற்றும் புதுமையை நோக்கிய பாதையை வகுக்க ஒரு தனித்துவமான தளத்தை வழங்குகிறது. தூய்மையான உற்பத்தி, திறமையான வள பயன்பாடு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், பசுமையான எதிர்காலத்தை நோக்கி தொழில்துறையின் மாற்றத்தை இயக்குவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
***
(Release ID: 2075419)
TS/PKV/RR/KR
(Release ID: 2075470)
Visitor Counter : 17