பாதுகாப்பு அமைச்சகம்
வியன்டியானில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மலேசியா, லாவோஸ் பாதுகாப்பு அமைச்சர்களை சந்தித்து பேசினார்
Posted On:
20 NOV 2024 7:14PM by PIB Chennai
வியன்டியானில் 11-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கிடையே பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மலேசிய பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமது கலீத் பின் நோர்டின் மற்றும் லாவோஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சான்சமோன் சன்யாலத் ஆகியோரை இன்று சந்தித்து பேசினார்.
மலேசிய பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின் போது, பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு தேவையான முடிவுகளை எட்டுவதற்கான பரஸ்பரம் இருதரப்பு முயற்சிகளை ஆதரிக்க ஒப்புக்கொண்டனர். 2025 -ம் ஆண்டின் முதல் காலாண்டில் மலேசியா-இந்தியா பாதுகாப்புக் குழு கூட்டத்தை நடத்துவதை இரு தலைவர்களும் எதிர்நோக்குவதாக குறிப்பிட்டனர். அதில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தரப்பினரும் விரிவான விவாதங்களை நடத்துவார்கள்.
லாவோஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின்போது, இந்த ஆண்டு ஆசியான் அமைப்பின் தலைமைத்துவமாக லாவோஸ் நாட்டின் திறமையான மற்றும் உள்ளடக்கிய தலைமைக்கு பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்காக ஆசியானின் ஒற்றுமை மற்றும் மையத்தன்மைக்கு இந்தியாவின் வலுவான ஆதரவை தெரிவித்த அவர், லாவோஸ் மற்றும் ஆசியான் உடனான உறவுகளை அனைத்து துறைகளிலும் இந்தியா தொடர்ந்து வலுப்படுத்தும் என்று ஜெனரல் சான்சமோன் சன்யாலாத்திடம் உறுதியளித்தார்.
நாளை நடைபெறும் 11வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து திரு ராஜ்நாத் சிங் உரையாற்றுவார். ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் அமைப்பில் ஆசியான் உறுப்பு நாடுகள் மற்றும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் 8 நாடுகள் (இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து) இடம் பெற்றுள்ளன. பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் இக்கூட்டம் நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2075209
***
IR/AG/DL
(Release ID: 2075230)
Visitor Counter : 13