தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் வரு ங்கால வைப்பு நிதியத்தில் 2024 செப்டம்பர் மாதத்தின் போது 18.81 லட்சம் நிகர உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2024 6:11PM by PIB Chennai

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2024 செப்டம்பர்  மாதத்திற்கான தற்காலிக ஊதிய தரவை வெளியிட்டுள்ளது. இதில் 18.81 லட்சம் நிகர உறுப்பினர்கள்  சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023 செப்டம்பர்  மாதத்துடன் ஒப்பிடும்போது  9.33% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைக் குறிக்கிறது.  அதிகரித்த வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பயனுள்ள மக்கள் தொடர்பு முயற்சிகளால் திட்டப் பலன்கள் குறித்த விழிப்புணர்வு தொழிலாளிகளுக்கு அதிகரித்துள்ளதையும் இந்த தரவு எடுத்துக்காட்டுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2024 செப்டம்பர் மாதத்தில் சுமார் 9.47 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தது. இது 2023 செப்டம்பர் மாதத்தை விட 6.22% அளவிற்கு புதிய உறுப்பினர்கள் அதிகமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2075169  

***

TS/IR/AG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2075213) வருகையாளர் எண்ணிக்கை : 91
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी