புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
பசுமை ஹைட்ரஜன் முன்முயற்சிகளை ஊக்குவிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது எஸ்இசிஐ
Posted On:
20 NOV 2024 3:49PM by PIB Chennai
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சூரிய மின்சக்தி கழகம் (எஸ்இசிஐ) பசுமை ஹைட்ரஜன் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான கூட்டு கட்டமைப்பை நிறுவ எச்2 குளோபல் ஸ்டிஃப்டங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது சந்தை அடிப்படையிலான வழிமுறைகள் குறித்த அறிவு பரிமாற்றத்தை மேம்படுத்துவதையும், இந்தியாவிற்கும் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் பசுமை ஹைட்ரஜன் பொருளாதாரத்தின் உலகளாவிய முன்னேற்றத்திற்கு இது பங்களிக்கிறது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய சூரிய மின்சக்தி கழகத்தின் இயக்குநர் (சோலார்) திரு சஞ்சய் சர்மா மற்றும் எச்2 குளோபல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுசானா மொரேரா ஆகியோர் நவம்பர் 19-ந் தேதி கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வில் தலைமை நிர்வாக அதிகாரி திரு டிமோ பொல்லர்ஹே (HintCo), திரு மார்கஸ் எக்ஸன்பெர்கர், நிர்வாக இயக்குநர் (H2 குளோபல் ஃபவுண்டேஷன்), திரு பிரசாந்த் குமார் சிங், செயலாளர் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஒத்துழைப்பு கூட்டு டெண்டர் வடிவமைப்பு கருத்துகளில் பணியாற்ற இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கிறது, குறிப்பாக பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்படும் ஏனைய பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி மையமாக மாறுவதற்கான இந்தியாவின் லட்சியத்துடன் ஒத்துப்போகும். இது இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் முயற்சிகளை மேலும் மேம்படுத்துவதில் கருவியாக இருக்கும்.
***
TS/PKV/RR/DL
(Release ID: 2075155)
Visitor Counter : 41