வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை, 8 தொழில்துறை பெருவழித்தடங்களின் 4-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

Posted On: 19 NOV 2024 7:39PM by PIB Chennai

சென்னை-பெங்களூரு தொழில்துறை பெருவழித்தடம் (CBIC), கிழக்கு கடற்கரை பொருளாதார பெருவழித்தடம் (ECEC), பெங்களூரு-மும்பை தொழில்துறை பெருவழித்தடம் (BMIC), மற்றும் அமிர்தசரஸ்-கொல்கத்தா தொழில்துறை பெருவழித்தடம் (AKIC),  ஆகிய 4 புதிய தொழில்துறை பெருவழித்தடங்களின் 8 வது ஆண்டு விழாவை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) இன்று கொண்டாடியது.

20 நவம்பர் 2019 அன்று அங்கீகரிக்கப்பட்ட இந்த பெருவழித்தடங்கள், உற்பத்தியை அதிகரிப்பதற்கும், நாடு முழுவதும் திட்டமிட்ட நகரமயமாக்கலை இயக்குவதற்கும், குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார நன்மைகளை உருவாக்குவதற்கும் மத்திய அரசின் முன்னோடி பார்வையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இந்த பெருவழித்தடங்களை நிறுவுவது இந்தியாவின் தொழில்துறை நிலப்பரப்பை மாற்றுவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இந்தியாவின் முக்கிய பிராந்தியங்களில் பரவியுள்ள ஒவ்வொரு பெருவழித்தடத்தையும், தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பை ஒருங்கிணைத்து, விரைவான தொழில்மயமாக்கலை ஆதரிக்கும். உலகத் தரம் வாய்ந்த இணைப்பை நிறுவும் வகையில் உத்திபூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிவேக ரயில் நெட்வொர்க்குகள், நவீன துறைமுகங்கள், பிரத்யேக சரக்கு போக்குவரத்து மையங்கள் மற்றும் மேம்பட்ட விமான நிலையங்கள் ஆகியவற்றுடன், இந்த பெருவழித்தடங்கள் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் புதிய தரங்களை அமைக்கின்றன.

தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விரைவான வளர்ச்சி மற்றும் பிராந்திய தொழில்துறை ஒருங்கிணைப்பை அடைய சென்னை-பெங்களூரு தொழில் பெருபெருவழித்தடம் (சிபிஐசி) திட்டமிடப்பட்டுள்ளது. இது கிழக்கு ஆசியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துகிறது, சென்னை முதல் பெங்களூரு வரை நீண்டுள்ளதுடன், மங்களூரு வரை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் கடலோர தாழ்வாரமான கிழக்கு கடற்கரை பொருளாதார பெருவழித்தடம் (ECEC), நாட்டின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி திறன்களை விரிவுபடுத்தியுள்ளது. பெருவழித்தடத்தின் குறுக்கே அமைந்துள்ள பல துறைமுகங்கள் சர்வதேச நுழைவாயில்களாக செயல்படுவது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, விநியோகச் சங்கிலியில் முக்கியமான இணைப்புகளாக செயல்படுகின்றன. உற்பத்தி கிளஸ்டர்கள் மற்றும் விநியோக மையங்களுக்கான லாஜிஸ்டிக்ஸ், பேக்கேஜிங் மற்றும் பிற சேவைகளை ஆதரிப்பதன் மூலம், அவை பொருளாதார நடவடிக்கை மற்றும் மேம்பாட்டின் மதிப்புமிக்க ஆதாரமாக உள்ளன. விசாகப்பட்டினம்-சென்னை தொழில்துறை பெருவழித்தடம் (VCIC) ECEC இன் முதல் கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2074768

***

MM/AG/DL


(Release ID: 2074779) Visitor Counter : 12


Read this release in: English