விவசாயத்துறை அமைச்சகம்
உலக மண் மாநாடு 2024 தொடக்க அமர்வில் மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் உரையாற்றினார்
Posted On:
19 NOV 2024 6:45PM by PIB Chennai
மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், புதுதில்லியில் உள்ள பூசாவில் இன்று நடைபெற்ற உலகளாவிய மண் மாநாடு 2024 தொடக்க அமர்வில் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இத்தாலியின் சர்வதேச மண் அறிவியல் ஒன்றியத்தின் கீழ் புதுதில்லியில் உள்ள இந்திய மண் அறிவியல் சங்கம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், புதுதில்லி தேசிய வேளாண் அறிவியல் அகாடமியுடன் இணைந்து, "உணவுப் பாதுகாப்புக்கு அப்பாற்பட்ட அக்கறை மண்: காலநிலை மாற்றத் தணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள்" என்ற தலைப்பில் இந்த உலகளாவிய மண் மாநாடு 2024-ஐ பூசாவில் ஏற்பாடு செய்திருந்தது. நித்தி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் ரமேஷ் சந்த், தாவர வகைகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் டாக்டர் திரிலோச்சன் மொஹாபத்ரா, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் டாக்டர் ஹிமான்ஷு பதக், உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் பல்வேறு முன்முயற்சிகளைப் பற்றி குறிப்பிட்ட, மத்திய வேளாண் அமைச்சர், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், உலகளாவிய நிலைத்தன்மையை அடைவதற்கும் மண் வளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மண் சுகாதார நிர்வாகத்தை பரந்த காலநிலை செயல் கொள்கைகளுடன் ஒருங்கிணைப்பதற்கான அரசின் செயலூக்கமான முயற்சிகளை அமைச்சர் எடுத்துரைத்தார். காலநிலை மாற்றத்தைத் தணிப்பதில் மண்ணின் பங்கை சுட்டிக்காட்டினார். மண் சிதைவு மற்றும் ஊட்டச்சத்து இழப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ள புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் அதே வேளையில், மண் உற்பத்தித்திறன் மற்றும் விரிதிறனை அதிகரிக்க விவசாயிகளை மையமாகக் கொண்ட தீர்வுகளை உருவாக்குவதில் விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074728
***
MM/AG/DL
(Release ID: 2074776)
Visitor Counter : 27