பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
குறை தீர்வு மதிப்பீடு மற்றும் குறியீட்டு எண் 2023 வெளியீடு
Posted On:
18 NOV 2024 5:45PM by PIB Chennai
பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் நடைமுறையில் பிரிவு வாரியாக ஏற்படும் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதியத் துறை, குறைதீர்வு மதிப்பீடு மற்றும் குறியீட்டு எண் முறையை 2022-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன்படி 2024-ம் ஆண்டுக்கான மதிப்பீடு மற்றும் குறியீட்டு எண்களை இத்துறைக்கான மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் பின்பற்றப்படும் குறைதீர்வு நடைமுறை, நான்கு பரிமாணங்கள் மற்றும் 11 குறியீடுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இதில் 10,000-க்கும் மேற்பட்ட குறைகளுக்கு தீர்வுகாணும் துறை ஏ பிரிவிலும், 2,000 முதல் 9,999 குறைகளுக்கு தீர்வு காணும் துறை பி பிரிவிலும் 2,000-க்கும் குறைவான தீர்வு காணும் துறை சி பிரிவிலும் இடம் பெறும். மொத்தம் உள்ள
மத்திய அரசின் 89 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில், 85 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 2022-ம் ஆண்டைவிட 2023-ம் ஆண்டில், குறைதீர்ப்பு நடவடிக்கை மேம்பட்டுள்ளது.
இதன்படி, ஏ பிரிவில், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை 10,000-க்கும் மேற்பட்ட குறைகளுக்குத் தீர்வு கண்டு, இந்த குறியீட்டு எண்ணில் ல் முதலிடத்தில் உள்ளது. இப்பிரிவில் அஞ்சல்துறை இரண்டாம் இடத்தில் உள்ளது. ‘பி’ பிரிவில் மத்திய தலைமை தணிக்கை அதிகாரி அலுவலகம் முதலிடத்திலும், நில ஆதாரங்கள் துறை இரண்டாம் இடத்திலும் உள்ளன. ‘சி’ பிரிவில் முதலீடு & பொதுச் சொத்து மேலாண்மைத்துறை மற்றும் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுத்துறைகள் முறையே முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்செயதிக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074321
-----
TS/MM/KPG/DL
(Release ID: 2074389)
Visitor Counter : 61