அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியாவின் நுண்ணுயிர் திறனைப் பயன்படுத்த 'ஒரு நாள் ஒரு மரபணுத்தொகுப்பு' முன்முயற்சி
Posted On:
18 NOV 2024 2:55PM by PIB Chennai
உயிரி தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சில் (ப்ரிக்) ஆகியவை இந்தியாவின் மகத்தான நுண்ணுயிர் திறனை வெளிப்படுத்த 'ஒரு நாள் ஒரு மரபணு தொகுப்பு' முன்முயற்சியை அறிமுகப்படுத்துகின்றன. இந்தியாவின் ஜி-20 ஷெர்பாவும் நிதி ஆயோகின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. அமிதாப் காந்த், 2024, நவம்பர் 9 அன்று புதுதில்லியில் உள்ள தேசிய நோயெதிர்ப்பு நிறுவனத்தில் நடைபெற்ற ப்ரிக் அமைப்பின் முதலாவது நிறுவக தினத்தன்று 'ஒரு நாள் ஒரு மரபணு தொகுப்பு முன்முயற்சி' தொடங்கப்பட்டதாக அறிவித்தார்.
'ஒரு நாள் ஒரு மரபணுத் தொகுப்பு' முன்முயற்சி நமது நாட்டில் காணப்படும் தனித்துவமான பாக்டீரியா இனங்களை முன்னிலைப்படுத்துவதுடன், சுற்றுச்சூழல், வேளாண்மை மற்றும் மனித ஆரோக்கியத்தில் அவற்றின் முக்கிய பங்களிப்பை வலியுறுத்தும். நுண்ணுயிரிகள் நமது சுற்றுச்சூழல் அமைப்புக்கு இன்றியமையாதவை. மீத்தேன் உற்பத்தியுடன் சேர்த்து அனைத்து உயிர்புவி வேதியியல் சுழற்சிகள், மண் உருவாக்கம், கனிம சுத்திகரிப்பு, கரிமக் கழிவுகள் ஆகியவற்றில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒட்டுமொத்தமாக இவை நமது புவிக்கோளில் ஏகநிலைமையைப் பராமரிக்க உதவுகின்றன. விவசாயத்தில் ஊட்டச்சத்து சுழற்சி, நைட்ரஜன் நிலைப்படுத்தல், மண் வளத்தை பராமரித்தல், பூச்சி மற்றும் களைகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மன அழுத்த சிகிச்சைக்கு உதவுகின்றன. நுண்ணுயிரிகள் தாவரங்களுடன் கூட்டுயிர் முறையில் தொடர்பு கொண்டு ஊட்டச்சத்து மற்றும் நீரை உறிஞ்சுவதற்கு இவை உதவுகின்றன. மனித உடலில் உள்ள மனித உயிரணுக்களின் எண்ணிக்கையை விட அதிகமான நுண்ணுயிர் செல்கள் உள்ளன. அவை நமது செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மன ஆரோக்கியத்திற்கும்கூட இன்றியமையாதவை. அனைத்து தொற்று நோய்களும் நோய்க்கிருமி நுண்ணுயிரிகளால் ஏற்படுகின்றன. மறுபுறம், தொற்று நோய்களுக்கு எதிரான நமது பாதுகாப்பிற்கு நோய்க்கிருமி அல்லாத நுண்ணுயிரிகள் இன்றியமையாதவையாக உள்ளன.
உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சில், தேசிய உயிரிமருத்துவ மரபணுத் தொகுப்பு நிறுவனம் ஆகியவற்றின் ஒருங்கிணைத்த இந்த முயற்சியானது, பாக்டீரியாலஜிக்கல் மரபணுவை பொதுமக்களுக்கு இலவசமாகக் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆவணங்கள் நுண்ணுயிரிகளின் அறிவியல் மற்றும் தொழில்துறை பயன்பாடு பற்றிய ஒரு கருத்தை வழங்கும். இதன் விளைவாக, நுண்ணுயிர் மரபணு தரவு பொது மக்களுக்கும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகவும் அணுகக்கூடியதாக மாறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074247
***
TS/SMB/RR/KR
(Release ID: 2074300)
Visitor Counter : 23