கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
தெற்காசியாவின் மிகப்பெரிய கடல்சார் சிந்தனை தலைமைத்துவ மாநாடான சாகர்மந்தன் தில்லியில் நாளை தொடங்குகிறது - 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்
சாகர்மந்தன் மூலம், வளமான நிலையான நீல பொருளாதாரத்தை மேம்படுத்துவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது: மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால்
Posted On:
17 NOV 2024 1:54PM by PIB Chennai
தெற்காசியாவின் மிகப்பெரிய கடல்சார் சிந்தனை தலைமைத்துவ மாநாடான சாகர்மந்தன் புதுதில்லியில் நாளை (18.11.2024) தொடங்குகிறது. மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் அமைச்சகம், அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (ORF) அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'சாகர்மந்தன் – தி கிரேட் ஓஷன்ஸ் டயலாக்' என்ற இந்த முதல் மாநாட்டுக் கூட்டம், கடல்சார் துறை குறித்த அறிவை மேலும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடல்சார் துறையின் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், வணிகத் துறையினர், சிந்தனைத் தலைவர்கள் போன்றவர்களுக்கு முதன்மையான உலகளாவிய தளத்தை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. எதிர்காலத் தயார் நிலை, நிலையான திறன் வாய்ந்த கடல்சார் துறைக்கான பயனுள்ள முடிவுகள் போன்றவை குறித்து இதில் விவாதிக்கப்படும்.
நிகழ்ச்சி குறித்துக் கருத்துத் தெரிவித்த மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், "சாகர்மந்தன் என்பது கடல்சார் துறையில், சிறந்த அறிவை உலகளாவிய நிபுணர்களிடமிருந்து பெறும் ஒரு முயற்சியாகும் என்றார். முக்கிய கடல்சார் பங்களிப்பாளராக இந்தியாவின் பங்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 2014 முதல், இந்தியா இத்துறையில் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது என்று அவர் கூறினார்.
கடல்சார் துறையில் கூட்டுப் பயணத்திற்கான பாதையை அமைப்பதற்கு இந்த நிகழ்வு ஒரு முதன்மையான தளத்தை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார். சாகர்மந்தன் இரண்டு நாட்கள் நடைபெறும் என்றும் இதில் நீலப் பொருளாதாரத்தில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நமது முன்முயற்சிகள் வெளிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். சாகர்மந்தன் மூலம், உள்ளடக்கிய வளர்ச்சி, நிலையான நடைமுறைகள், வளமான நீல பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (ORF) தலைவர் சமீர் சரண் இந்த நிகழ்ச்சியை நெறிப்படுத்துவார்.
நைஜீரியா, கிரீஸ், மாலத்தீவுகள், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, தைவான், பெல்ஜியம், எகிப்து, நார்வே, பிரேசில், ஆஸ்திரேலியா, டென்மார்க், எத்தியோப்பியா, ஜெர்மனி, சுவீடன், இத்தாலி, லெபனான், மலேசியா, பிலிப்பைன்ஸ், போலந்து, போர்ச்சுகல், துனிசியா, துருக்கி, அமெரிக்கா, தென் கொரியா, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, அர்ஜென்டினா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளிலிருந்து உலகளாவிய பிரதிநிதிகள் இந்த கடல்சார் சிந்தனை தலைமைத்துவ மாநாட்டில் பேச உள்ளனர். மொத்தம் 60 நாடுகளைச் சேர்ந்த 160 பிரதிநிதிகள் இந்த இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
பங்கேற்பாளர்கள் நீலப் பொருளாதாரம், கடல்சார் போக்குவரத்து, துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள், முக்கியமான கனிமங்கள், பன்முகப்படுத்தப்பட்ட விநியோகச் சங்கிலிகள், உலகளாவிய கடல்சார் பொருளாதாரம் ஆகியவை குறித்து முக்கியமான உரையாடல்களில் ஈடுபடுவார்கள்.
***
PLM/DL
(Release ID: 2074061)
Visitor Counter : 36