பாதுகாப்பு அமைச்சகம்
பினாகா ஆயுத அமைப்பின் சோதனைகளை டிஆர்டிஓ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது
Posted On:
14 NOV 2024 6:41PM by PIB Chennai
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) பி.எஸ்.க்யூ.ஆர் சரிபார்ப்பு சோதனைகளின் ஒரு பகுதியாக துல்லியமாக தாக்கும் பினாகா ஆயுத அமைப்பின் சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. வெவ்வேறு துப்பாக்கி சுடும் நிலைகளில் மூன்று கட்டங்களாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த சோதனைகளின்போது, அளவீடு, துல்லியம், நிலைத்தன்மை, சுடும் வேகம் ஆகிய அளவீடுகள், ராக்கெட்டுகளின் விரிவான சோதனையின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டன. ஏவுகணை உற்பத்தி நிறுவனங்களால் மேம்படுத்தப்பட்ட சேவையில் உள்ள இரண்டு பினாகா செலுத்துவாகனங்களிலிருந்து ஒவ்வொரு உற்பத்தி நிறுவனத்திலிருந்தும் பன்னிரண்டு (12) ராக்கெட்டுகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
பினாகா துல்லிய தாக்குதல் என்பது முற்றிலும் உள்நாட்டு ஆயுத அமைப்பாகும்.
பி.எஸ்.க்யூ.ஆர் முறையை வெற்றிகரமாக பரிசோதித்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தையும் இந்திய ராணுவத்தையும் பாராட்டிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இந்த துல்லிய தாக்குதல் பினாகா ஆயுத அமைப்பை அறிமுகப்படுத்துவது ஆயுதப்படைகளின் பீரங்கி சுடும் திறனை மேலும் அதிகரிக்கும் என்றார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் சோதனைகளுடன் தொடர்புடைய குழுக்களை வாழ்த்தியதோடு, ராக்கெட் அமைப்பு இந்திய இராணுவத்தில் சேர்ப்பதற்கு முன்பு தேவையான அனைத்து சோதனைகளையும் முடித்துள்ளது என்றார்.
***
(Release ID: 2073488)
Visitor Counter : 20