குடியரசுத் தலைவர் செயலகம்
குருநானக் தேவ் பிறந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
14 NOV 2024 6:36PM by PIB Chennai
குருநானக் தேவ் பிறந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "குருநானக் தேவ் பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக நமது சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
குருநானக் தேவின் அன்பு, விசுவாசம், உண்மை மற்றும் தியாகம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. அவரது போதனைகள் தார்மீக நெறிமுறைகளை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன. லங்கர் என்று அழைக்கப்படும் சமூக சமையல் கூட நடைமுறையை அவர் நிறுவினார். சகோதரத்துவத்தை ஆதரித்தார். சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றும் போது அறிவு மற்றும் துறவைப் பெறுவதற்கு ஆன்மீகத்தின் பாதையைப் பின்பற்ற அவர் அனைவருக்கும் ஊக்கமளித்தார். நேர்மையையும் கடின உழைப்பையும் கடைபிடிக்கவும், தங்கள் வருவாயை தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அவர் மக்களை ஊக்குவித்தார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
குருநானக் தேவ் போதனைகளை நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு, சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவோம்" என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
*****
AD/IR/KPG/DL
(रिलीज़ आईडी: 2073482)
आगंतुक पटल : 66