சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுகாதார ஆராய்ச்சித் துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் ஆகியன இணைந்து சுகாதார ஆராய்ச்சித் திறன் உச்சி மாநாடு 2024-ஐ நடத்தின

Posted On: 14 NOV 2024 3:21PM by PIB Chennai

சுகாதார ஆராய்ச்சித் துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் ஆகியவை இணைந்து சுகாதார ஆராய்ச்சித் திறன் உச்சி மாநாடு 2024 ஐ புதுதில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் இன்று நடத்தின. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின்  113 வது நிறுவன தினத்தைக் குறிக்கிறது. இந்தியாவில் உயிரி மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கான நிறுவனம் மேற்கொண்ட நூற்றாண்டு கால உறுதிப்பாடு கொண்டாடப்பட்டது.

இந்த உச்சிமாநாட்டில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா (காணொலி  மூலம்) உட்பட சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சித் துறைகளைச் சேர்ந்த முக்கிய  தலைவர்கள் இதில் பங்கேற்றனர். மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்), டாக்டர் வி.கே.பால், சுகாதாரத் துறை மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத் தலைமை இயக்குநர் டாக்டர் ராஜீவ் பாஹல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா கூட்டத்தில் உரையாற்றினார். (வீடியோ பதிவு செய்தி மூலம்). "தற்போது, சுகாதார ஆராய்ச்சியை முன்னேற்றுவதற்கும் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் உறுதிப்பாட்டின் ஒரு நூற்றாண்டை நாம் கொண்டாடுகிறோம் என்று கூறினார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமமானது உயிரி மருத்துவ ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ளது.   இன்றியமையாத  சுகாதாரச் சவால்களை எதிர்கொள்வதில் முக்கிய பங்கினை யுகம் வகிக்கிறது. காசநோய், மலேரியா மற்றும் கோவிட்-19 போன்ற தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவதிலிருந்து, தொற்றா நோய்கள், தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கான தீர்வுகளை முன்னெடுப்பது வரை பெரும் பங்காற்றி வருகிறது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், "இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை முன்னேற்றுவதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் நீண்ட காலமாக முன்னோடியாக திகழ்கிறது என்று தெரிவித்தார். "வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற இலக்கை நோக்கி நாங்கள் பணியாற்றுகையில், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் சுகாதார ஆராய்ச்சித் துறை - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமைத்துவம், அதன் வெளியிடத் திட்டங்கள் மற்றும் உள்திட்டங்கள் மூலம், சுகாதாரப் பராமரிப்பில் மாற்றத்தக்க முன்னேற்றத்தைக் காண்கிறது என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2073268

-----

TS/IR/KPG/KR/DL


(Release ID: 2073420) Visitor Counter : 29


Read this release in: English , Urdu , Hindi