பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
12-வது பொதுத்துறை நிறுவனங்கள் உச்சிமாநாட்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான எரிசக்திக்கான பார்வை ஆகியவற்றை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி எடுத்துரைத்தார்
Posted On:
14 NOV 2024 4:19PM by PIB Chennai
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகவும், 2047-க்குள் வளர்ந்த நாடாகவும் இந்தியா மாற உள்ளது என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, புதுதில்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த 12-வது பொதுத்துறை நிறுவனங்கள் உச்சிமாநாட்டில் உரையாற்றினார். 2014-ல் பலவீனமான பொருளாதாரத்திலிருந்து இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியிருப்பதை சுட்டிக்காட்டிய திரு பூரி, நாட்டின் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதிலும், நீடித்த எரிசக்தி எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கை எடுத்துரைத்தார்.
உலகளாவிய பொருளாதார சக்தியாக மாறுவதை நோக்கிய இந்தியாவின் போக்கு, வலுவான சீர்திருத்தங்கள் மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது என்று திரு பூரி எடுத்துரைத்தார். கடந்த பத்தாண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களின் மீள்திறன் மற்றும் செயல்திறனைப் பாராட்டிய அவர், இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு அவற்றின் பங்களிப்பு ஒருங்கிணைந்ததாக இருந்தது என்றும் குறிப்பிட்டார். "நாம் எதிர்காலத்தைப் பார்க்கும்போது, இந்தியாவின் அடுத்த முன்னேற்றத்துக்கான அடித்தளத்தை அமைப்பதில் அடுத்த சில ஆண்டுகள் முக்கியமானதாக இருக்கும்" என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க செயல்திறனை விளக்கும் பல முக்கிய புள்ளிவிவரங்களை அமைச்சர் பகிர்ந்து கொண்டார். மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் நிகர மதிப்பு 82% அதிகரித்துள்ளது, 14-ம் நிதியாண்டில் ரூ.9.5 டிரில்லியனில் இருந்து 23-ம் நிதியாண்டில் ரூ.17.33 டிரில்லியனாக அதிகரித்துள்ளது. கலால் வரிகள், வரிகள் மற்றும் ஈவுத்தொகை மூலம் தேசிய கருவூலத்திற்கு மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது, இது 14-ம் நிதியாண்டில் ரூ .2.20 லட்சம் கோடியிலிருந்து 23-ம் நிதியாண்டில் ரூ.4.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகர லாபம் 2014 -ஆம் நிதியாண்டில் ரூ 1.29 லட்சம் கோடியிலிருந்து 2023-ஆம் நிதியாண்டில் ரூ 2.41 லட்சம் கோடியாக 87% அதிகரித்துள்ளது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். மேலும், அனைத்து பட்டியலிடப்பட்ட 81 பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனமயமாக்கல் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் 225% அதிகரித்துள்ளது. இது கடந்த தசாப்தத்தில் PSE குறியீடு மற்றும் BSE சென்செக்ஸ் இரண்டையும் விஞ்சியுள்ளது என்று அவர் கூறினார்.
இந்தியாவின் எரிசக்தித் துறைக்கான தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டிய அமைச்சர், கிடைக்கும் தன்மை, கட்டுப்படியாகும் தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகிய மூன்று முக்கிய கொள்கைகளை வலியுறுத்தினார். "நிலைத்தன்மை என்பது எங்கள் எரிசக்தி மூலோபாயத்தின் அஸ்திவாரமாகும். மேலும் PSEகளை நிலையான வளர்ச்சியின் இயந்திரங்களாக மாற்றுவதற்கான எங்கள் பார்வையுடன் நேரடியாக ஒத்துப்போகிறது," என்று அவர் கூறினார்.
நீடித்த நிலைத்தன்மை மீதான இந்தியாவின் கவனத்திற்கு உயிரி எத்தனால் கலப்பதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அவர் எடுத்துரைத்தார். "2014-ல் 1.53% ஆக இருந்த எத்தனால் கலப்பு 2024 இல் 15% ஆக உயர்ந்துள்ளது. அரசு 20% கலப்பு என்ற இலக்கை 2025 க்கு முன்னெடுத்துள்ளது," என்று அவர் கூறினார். 2025 க்குப் பிந்தைய கட்டத்திற்கான ஒரு செயல்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவாதங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளன, அதாவது 20% எத்தனால் கலப்பு இலக்கை அடைந்த பிறகு, பயோஎத்தனால் துறையில் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்தல் மற்றும் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை முன்னேற்றுவது குறித்து விவாதங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
புதைபடிவ எரிபொருள்கள் குறித்து பேசிய அமைச்சர், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களுக்கு இந்தியா படிப்படியாக மாறி வரும் அதே வேளையில், புதைபடிவ எரிபொருள்கள் எதிர்காலத்தில் எரிசக்தி கலவையின் ஒரு பகுதியாக தொடரும் என்றும் கூறினார். எரிசக்தி பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் கட்டுப்படியாகும் தன்மை ஆகியவற்றை உறுதி செய்யும் அதே வேளையில் எரிசக்தி மாற்றத்தை சமநிலைப்படுத்துவதே அரசின் அணுகுமுறையாக இருக்கும் என்று அவர் எடுத்துரைத்தார்.
ஒத்துழைப்பு மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கான தளத்தை வழங்கும் உச்சிமாநாடுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சிஐஐ மேற்கொண்டு வரும் முயற்சிகளை அமைச்சர் பாராட்டினார். "இந்த உச்சிமாநாடுகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், எதிர்கால சவால்களுக்கு தீர்வுகளைக் கண்டறியவும் உதவுகின்றன," என்று அவர் கூறினார். இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் சிறப்பு, ஒருமைப்பாடு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றின் தூண்களாக நின்று, நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை வழிநடத்தும் எதிர்காலத்தை உருவாக்க அனைத்து பங்குதாரர்களின் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
***
TS/PKV/KV/KR/DL
(Release ID: 2073401)
Visitor Counter : 20