மத்திய பணியாளர் தேர்வாணையம்
ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு 2024-ன் முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது
Posted On:
14 NOV 2024 2:13PM by PIB Chennai
மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஜூலை 14-ஆம் தேதி நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு, 2024 இன் எழுத்துத் தேர்வு (பகுதி-I) மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் 2024 வரை நடைபெற்ற ஆளுமைத் தேர்வு (பகுதி - II) ஆகியவற்றின் முடிவின் அடிப்படையில், இரண்டு பிரிவுகளின் கீழ் சேவைகள் / பதவிகளுக்கு நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன:
தேர்வர்களின் தகுதி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட மண்டலத்தில் OBC பிரிவைச் சேர்ந்தவர்கள், அறிவிக்கப்பட்ட காலியிடங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
தேர்வு நடத்தப்பட்ட சேவைகள் / பதவிகளுக்கான நியமனங்கள் கிடைக்கக்கூடிய காலியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும். பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு சேவைகள் / பதவிகளின் முன்னுரிமைக்கு ஏற்ப நியமனம் வழங்கப்படும்.
தற்காலிக விண்ணப்பதாரர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் அசல் ஆவணங்களை தேர்வாணையம் சரிபார்க்கும் வரை பணி நியமனம் வழங்கப்பட மாட்டாது. அவர்களின் தற்காலிகத்தன்மை இறுதி முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். தற்காலிக விண்ணப்பதாரர் இந்த காலத்திற்குள் ஆணையத்தால் கோரப்பட்ட அசல் ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறினால், அவரது தேர்வு ரத்து செய்யப்படும். மேலும் இது தொடர்பாக மேற்கொண்டு எந்த கடிதப் போக்குவரத்தும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
மத்திய பணியாளர் தேர்வாணைய வளாகத்தில் உள்ள தேர்வு அரங்கு கட்டிடத்திற்கு அருகில் 'கவுண்டர்' உள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வு தொடர்பான எந்த தகவலையும் / விளக்கங்களையும் வேலை நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நேரிலோ அல்லது 011-23385271 மற்றும் 011-23381125 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ பெறலாம். தேர்தல் முடிவுகள் ஆணையத்தின் இணையதளத்திலும் (அதாவது www.upsc.gov.in) கிடைக்கும். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் மதிப்பெண் பட்டியல் www.upsc.gov.in இணையதளத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2073258
***
TS/PKV/KV/KR
(Release ID: 2073258)
(Release ID: 2073270)
Visitor Counter : 21