பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி 2024-ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் அரங்கு
Posted On:
13 NOV 2024 5:59PM by PIB Chennai
புதுதில்லி, பாரத் மண்டபத்தில் நடைபெறும் 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் அதிநவீன அரங்கை செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், 2024 நவம்பர் 14 அன்று திறந்து வைக்க உள்ளார். "Panchayat@ViksitBharat2047" என்ற கருப்பொருளில் அரங்கு எண் எச்-4, பஞ்சாயத்துகளை நவீன, தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் கிராமப்புற நிர்வாகத்தின் பொறுப்புள்ள நிறுவனங்களாக மாற்றுவதற்கான அமைச்சகத்தின் தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கிறது.
டிஜிட்டல் மாற்றத்திற்கான அரசின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் எதிர் வரும் ஆண்டுகளில் அனைத்து பஞ்சாயத்துகளும் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சார்ந்த நவீன நிறுவனங்களாக உருவாகும் என்று எதிர்பார்க்கிறது. கிராமப்புற நிர்வாகத்தை மாற்றியமைக்கும் புரட்சிகர டிஜிட்டல் முயற்சிகளைக் எடுத்துக் காட்டும் தளமாக இந்த அரங்கு செயல்படுகிறது. இந்த டிஜிட்டல் மாற்றத்தின் முக்கிய அம்சமாக மேரி பஞ்சாயத்து செயலி திகழ்கிறது. இது பஞ்சாயத்து சேவைகளை நேரடியாக குடிமக்களின் ஸ்மார்ட் போன்களுக்கு கொண்டு செல்லும் ஒரு புதுமையான முறையாகும். இது சேவைகள், செயல்பாடுகள் மற்றும் நிதித் தகவல்களுக்கு தேவையான அணுகலை செயல்படுத்துகிறது.
அமைச்சகத்தின் விரிவான டிஜிட்டல் அமைப்பில் 22 இந்திய மொழிகளில் கிடைக்கும் ஒருங்கிணைந்த தளமான இகிராம்ஸ்வராஜ் அடங்கும். இது ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டமிடல், பட்ஜெட் மற்றும் கண்காணிப்பு திறன்கள் மூலம் பஞ்சாயத்து செயல்பாடுகளை மாற்றியுள்ளது. முன்னோடிகிராம மஞ்சித்ராதளம் கிராம பஞ்சாயத்து மட்டத்தில் இடஞ்சார்ந்த திட்டமிடல் மற்றும் வானிலை முன்னறிவிப்புக்கான அதிநவீன புவிசார் தீர்வுகளை வழங்குவதன் மூலம் இந்த டிஜிட்டல் மாற்றத்தை மேலும் உயர்த்துகிறது.
2024 நவம்பர் 14 முதல் 27 வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு வருகை தந்து அரங்கை பார்வையிடுமாறு தொடர்புடைய அனைவர்களுக்கும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2073076
****
IR/KPG/KV
(Release ID: 2073095)
Visitor Counter : 19