அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவின் பாரம்பரிய அறிவைப் பரப்புவதற்கு பல்துறை ஆராய்ச்சியும், ஒத்துழைப்பும் அவசியம்: தெற்காசிய பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் கே.கே.அகர்வால்

Posted On: 13 NOV 2024 4:27PM by PIB Chennai

 

இந்திய தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் தேசிய அறிவியல் தகவல் மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமும்,  (CSIR-National Institute of Science Communication and Policy Research -NIScPR) குருகிராம் பல்கலைக்கழகமும் இணைந்து குருகிராமில் பாரம்பரிய அறிவின் தொடர்பும், பரவலும் (CDTK-2024) என்பது குறித்த சர்வதேச மாநாட்டை 2024  நவம்பர் 13 அன்று நடத்தின.

இதில், குருகிராம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் தினேஷ் குமார் வரவேற்புரை ஆற்றினார்.

புது தில்லியின் சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்சிபிஆர் இயக்குநர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால் மது உரையில், அறிவியல் ரீதியாக சரிபார்க்கப்பட்ட பாரம்பரிய அறிவு பற்றிய கண்ணோட்டத்தை வழங்கினார்.

புது தில்லி (இந்தியா) தெற்காசிய பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் கே.கே.அகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். பாரம்பரிய அறிவு திறம்பட பயன்படுத்தப்படுவதன் நோக்கத்தையும் பலதுறை ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார். நமது பாரம்பரிய அறிவை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

 

சர்வதேச மாநாட்டின் (CDTK-2024) தொடக்க அமர்வில் அறிவியல் ரீதியாக சரிபார்க்கப்பட்ட இந்திய பாரம்பரியங்கள் தொடர்பான இரண்டு டிஜிட்டல் ஃபிளிப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2073026

***

PLM/RS/KV


(Release ID: 2073044) Visitor Counter : 15


Read this release in: English , Urdu , Hindi