பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெரு வணிக நிறுவனங்கள் விவகார அமைச்சகம் சிறப்பு பிரச்சாரம் 4.0-ல் பங்கேற்றது

Posted On: 13 NOV 2024 9:24AM by PIB Chennai

பெரு வணிக நிறுவனங்கள் விவகார அமைச்சகம் 02.10.24 முதல் 31.10.24 வரை சிறப்பு முகாம் 4.0-ன் கீழ் பல்வேறு நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்கேற்றது. இந்தக் காலகட்டத்தில், நிலுவையில் உள்ள பணிகளைக் குறைத்தல், அடையாளம் காணப்பட்ட பிற பணிகளை அகற்றுதல் போன்ற அனைத்து நோக்கங்களையும் நிறைவேற்ற அமைச்சகம், மண்டல அலுவலகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த அலுவலகங்கள் மூலம் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு அளவீடுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அமைச்சகத்தின் வலைதளம், சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சாரத்தின் போது, அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்கள் / அமைப்புகள் அதில் தீவிரமாகப் பங்கேற்றன. மேலும் 23 தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டன. மொத்தம் 2810 நேரடி கோப்புகளை அமைச்சகம் மதிப்பாய்வு செய்தது. அவற்றில் 1781 கோப்புகள் முடித்து வைக்கப்பட்டன. மதிப்பாய்வுக்காக அடையாளம் காணப்பட்ட அனைத்து மின் கோப்புகளும் மதிப்பாய்வு செய்யப்பட்டன. 3 நாடாளுமன்ற உறுதிமொழிகள் மற்றும் 573 பொதுமக்கள் குறைகள் தீர்க்கப்பட்டன. பழைய மற்றும் பயன்படுத்த முடியாத பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் தூய்மையான மற்றும் இணக்கமான சூழல் / வேலை இடங்கள் உருவாக்கப்பட்டன.

***

(Release ID: 2072917)
PKV/RR/KR


(Release ID: 2072933) Visitor Counter : 17


Read this release in: English , Urdu , Hindi , Gujarati