அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு முகாம் 4.0-வில் அணுசக்தித் துறையின் சாதனைகள்

Posted On: 12 NOV 2024 5:56PM by PIB Chennai

  மத்திய அரசின் அணுசக்தித் துறை, இந்தியா முழுவதும் 12 உறுப்பு அலகுகள், 11 அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் 5 பொதுத்துறை நிறுவனங்களைக் கொண்டுள்ளது. முந்தைய சிறப்பு முகாம்களைப் போலவே, சிறப்பு முகாம் 4.0-மும் துறையின் அனைத்து உறுப்பு அலகுகள் / பொதுத்துறை நிறுவனங்கள் / அரசு உதவி பெறும் நிறுவனங்களின் தீவிர பங்கேற்புடன் நிறைவேற்றப்பட்டது. அலுவலக வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு தூய்மை முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளான நடைபயிற்சிகள், விழிப்புணர்வு பேச்சு, தெரு நாடகம், ஓவியப் போட்டிகள் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு முகாம் 4.0-ன் பிற நோக்கங்களான மேற்கோள் ஆவணங்களை முடித்து வைத்தல், பதிவேடுகளை மேலாண்மை செய்தல், கழிவுகளை அகற்றுதல் போன்றவற்றை முழுமையாக அடைய அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சிறப்பு முகாம் 4.0-ன் போது 51255 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 50599 கோப்புகள் முடித்து வைப்பதற்காக கண்டறியப்பட்டன. அணுசக்தித் துறையின் உறுப்புப் பிரிவுகள் / பொதுத்துறை நிறுவனங்கள் / அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மொத்தம் 146 தூய்மை முகாம்களை நடத்தி, கழிவுகளை அகற்றுவதன் மூலம் ரூ.5324573/- வருவாய் ஈட்டியுள்ளன. கழிவுகள் அகற்றப்பட்டதால் சுமார் 19579 சதுர அடி பரப்பளவு இடம் விடுவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்களின் போது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள்: குவஹாத்தியில் உள்ள டாடா நினைவு மையத்தில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

மும்பை ணுசக்தி நகரில் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் ஏற்பாடு செய்த தெரு நாடகம்

கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் இயக்கம்

அணுசக்தித் துறையின் பல்வேறு உறுப்புப் பிரிவுகள் / பொதுத்துறை நிறுவனங்கள் / அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பிரச்சாரங்கள்

சிறப்பு முகாம் 4.0-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளையும் அடைய இத்துறை கடுமையாக முயற்சி செய்துள்ளது. வரும் ஆண்டிலும் இப்பணியைத் தொடர அணுசக்தித் துறை அதே ஆர்வத்துடனும் நேர்மையுடனும் தொடர்ந்து பாடுபடும்.

***

PKV/AG/KV


(Release ID: 2072817) Visitor Counter : 26


Read this release in: English , Urdu , Hindi