பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளால், மக்களுக்கான பொது சேவை வழங்கலில் சிறந்த நடைமுறைகளை செயல்படுத்துவதற்கான இணைய கருத்தரங்கு நடைபெற்றது
Posted On:
12 NOV 2024 12:12PM by PIB Chennai
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்புத் துறை மின்-ஆளுகை முன்னெடுப்புகளுக்காக 2023 செப்டம்பர் 22 அன்று மாதாந்திர தேசிய மின்-ஆளுகை இணையக் கருத்தரங்குத் தொடரை அறிமுகப்படுத்தியது. இது மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
"பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளால் வழங்கப்படும் குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகள்" என்ற கருப்பொருளின் கீழ் தேசிய மின்-ஆளுகை இணையக் கருத்தரங்கின் சிறப்பு அமர்வு இன்று நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கிற்கு நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்புத்துறைச் செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கினர்.
இதைத் தொடர்ந்து, மத்திய மக்கள் தொடர்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு அலோக் பிரேம் நகர், துறையின் சார்பில் விரிவான விளக்கத்தை அளித்தார். பிறப்பு, இறப்பு, திருமணம் மற்றும் குடியிருப்பு சான்றிதழ்கள், கட்டுமான அனுமதிகள், குறித்த விளக்கக்காட்சிகள் இடம் பெற்றது.
இதைத் தொடர்ந்து, சேவை வழங்கல் மாதிரிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மாநில பஞ்சாயத்து ராஜ் அதிகாரிகளுடன் பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது. மின்-ஆளுகை சீர்திருத்தங்கள் மற்றும் ஒட்டுமொத்த பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகள் மற்றும் முன்முயற்சிகளை வெளிப்படுத்துவதற்காக மாநிலங்களின் பஞ்சாயத்து ராஜ் துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள் அளவிலான அதிகாரிகளால் விளக்கக்காட்சிகள் வழங்கப்பட்டன:
திரு. ககன்தீப் சிங், தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர்
உமா மகாதேவன், கர்நாடக கூடுதல் தலைமைச் செயலாளர்
திரு. ஏக்நாத் தவாலே, செயலாளர் (பஞ்சாயத்து ராஜ்), மகாராஷ்டிரா
திருமதி மேரி ஜோசப், செயலாளர் (பஞ்சாயத்து ராஜ்), கேரளா
திருமதி மோனா கந்தர், செயலாளர் (பஞ்சாயத்து ராஜ்), குஜராத்
திரு. லோகேஷ், செயலாளர் (பஞ்சாயத்து ராஜ்), தெலங்கானா
உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்தக் கருத்தரங்கில் முதன்மை செயலாளர்கள், நிர்வாக சீர்திருத்தச் செயலாளர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை, மாநில தகவல் அதிகாரிகள் உள்ளிட்ட 1,100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
.***
(Release ID: 2072648)
IR/KPG/KR
(Release ID: 2072658)
Visitor Counter : 41