தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) அலுவலகத்தின் கீழ் உள்ள கள அலுவலகங்களின் செயல்பாடு குறித்து, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் ஆய்வு

Posted On: 12 NOV 2024 10:31AM by PIB Chennai

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) அலுவலகத்தின் கீழ் உள்ள கள அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்கான மறுஆய்வுக் கூட்டம் கலப்பின முறையில் 11.11.2024 அன்று நடைபெற்றது. துறையின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா இக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் மூத்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர் திரு அலோக் சந்திரா, தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) திரு கே.சேகர், துணை தலைமை தொழிலாளர் ஆணையர்கள் (மத்திய), பிராந்திய தொழிலாளர் ஆணையர்கள் (மத்திய), உதவி தொழிலாளர் ஆணையர்கள் (மத்திய) மற்றும் நாடு முழுவதும் உள்ள கள அலுவலகங்களின் தொழிலாளர் அமலாக்க அதிகாரிகள் (மத்திய) ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஷ்ரம் சுவிதா இணையதளத்தில் (எஸ்.எஸ்.பி) நிலுவையில் உள்ள தொழிற்தகராறுகள், உரிமைகோரல் வழக்குகள், ஆய்வு வழக்குகள் குறித்து அறிக்கை அளிப்பது பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளின் அடிப்படையில், மாநில வாரியாக கள அலுவலகங்களின் செயல்பாடு மதிப்பீடு செய்யப்பட்டது. தொழில் தகராறுகள் மற்றும் உரிமைகோரல்கள் தொடர்பான வழக்குகளை சரியான நேரத்தில் முடித்த கள அலுவலகங்கள், ஆய்வு அறிக்கைகள் குறைவாக நிலுவையில் இருப்பதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், பின்தங்கியவர்கள் காரணங்களை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

தொழிற் தகராறுகளுக்கு உரிய நேரத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய செயலாளர் சுமிதா தவ்ரா, நிலுவையில் உள்ள தொழிற்தகராறு வழக்குகளை கள அலுவலர்களிடமிருந்து கேட்டறிந்து, அவற்றை விரைந்து முடிக்க உத்தரவுகளை பிறப்பித்தார்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கள அலுவலகங்கள் முறையான திட்டமிடல், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கான காரணிகளை முறையாக மதிப்பீடு செய்தல் மற்றும் தொழிலாளர்களின் அவல நிலையை போக்க உடனடியாக திருத்த நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

தொழில் தகராறுகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம், முதலீட்டுக்கு உகந்த இடமாக இந்தியாவை மாற்றுவது, நாட்டின் வர்த்தக சூழலை மேம்படுத்துவதற்கான ஒரு நல்ல அறிகுறியாகும் என்ற உண்மையை சுட்டிக் காட்டினார். இது நமது மக்கள்தொகை ஈவுத்தொகைக்கு அதிக வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன், வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான தொலைநோக்கு பார்வையை நனவாக்கும்.

கள அலுவலகங்களின் வாராந்திர முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. குழு உருவாக்க உணர்வுடனும், தொழிலாளர் நலனை உறுதி செய்வதிலும் ஒருவருக்கொருவர் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் பணியாற்றுமாறு திருமதி சுமிதா தவ்ரா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

***

(Release ID: 2072604)
MM/RR/KR


(Release ID: 2072627) Visitor Counter : 38


Read this release in: English , Urdu , Hindi