அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியாவின் வடக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் டிக்லிப்டெராவின் புதிய நெருப்பைத் தாங்கி வளரக்கூடிய இரட்டை பூக்கும் இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
Posted On:
11 NOV 2024 4:22PM by PIB Chennai
ஒரு புதிய நெருப்பைத் தாங்கி வளரக் கூடிய இரட்டை பூக்கும் இனம் புல்வெளி தீயால் தூண்டப்பட்ட பூக்கும் வெடிப்பை அனுபவிக்கிறது மற்றும் இந்திய இனங்களில் அரிதான ஒரு மஞ்சரி அமைப்பைக் கொண்டுள்ளது, இது மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல உயிரினங்களுக்கு இடமளிப்பதாக அறியப்படுகிறது.
இந்தியாவின் நான்கு உலகளாவிய பல்லுயிர் பெருக்கம் அதிகமுள்ள இடங்களில் ஒன்றான மேற்குத் தொடர்ச்சி மலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டி.எஸ்.டி) கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனமான புனேவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனம் (ஏ.ஆர்.ஐ), நீண்ட காலமாக ஆய்வின் மையமாக உள்ளது. கடந்த சில தசாப்தங்களாக, ஏ.ஆர்.ஐ விஞ்ஞானிகள் இப்பகுதியின் வளமான பல்லுயிர் பெருக்கத்தை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
தலேகான்-தபாடேவைச் சேர்ந்த தாவரவியலாளர் ஆதித்யா தாராப் மற்றும் பி.எச்.டி மாணவர் பூஷன் ஷிக்வான் உள்ளிட்ட டாக்டர் மந்தர் தாதர் தலைமையிலான குழு, சமீபத்தில் கண்டுபிடித்தது. டிக்லிப்டெரா பேரினத்தில் ஒரு புதிய இனத்தைச் சேர்த்துள்ளது, அதற்கு அவர்கள், டிக்லிப்டெரா, பாலிமார்பா என்று பெயரிட்டுள்ளனர். இந்த இனம், புல்வெளிகள் மற்றும் தீவன சந்தைகளுக்கு பெயர் பெற்ற பகுதியான தலேகான்-தபாடேவிலிருந்து சேகரிக்கப்பட்டது.
டிக்லிப்டெரா பாலிமார்பா ஒரு தனித்துவமான இனமாகும், இது அதன் நெருப்பைத் தாங்கி வளரும் தன்மை, பைரோஃபைடிக் பழக்கம் மற்றும் அதன் அசாதாரண இரட்டை-பூக்கும் முறைக்கு குறிப்பிடத்தக்கது. பருவமழைக்குப் பிந்தைய அதன் வழக்கமான பூக்கும் பூக்களுக்கு அதிகமாக, இந்த இனம், இப்பகுதியில் உள்ள உள்ளூர் மக்களால் பொதுவாக அமைக்கப்படும் புல்வெளி, தீயால் தூண்டப்பட்ட இரண்டாவது, தீவிரமான பூக்கும் வெடிப்பை வெளிப்படுத்துகிறது. இந்த இனம் வகைப்பாட்டியல் ரீதியாக தனித்துவமானது, மஞ்சரி அலகுகள் (சைமுல்கள்) ஸ்பைகேட் மஞ்சரிகளாக உருவாகின்றன. இந்த ஸ்பைகேட் மஞ்சரி அமைப்பைக் கொண்ட ஒரே அறியப்பட்ட இந்திய இனம் இதுவாகும், இதன் நெருங்கிய கூட்டு ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது.
அதன் மாறுபட்ட உருவவியல் பண்புகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த இனத்திற்கு டிக்லிப்டெரா பாலிமார்பா என்று பெயரிடப்பட்டது. முதல் மாதிரிகள் 2020 பருவமழையின் போது சேகரிக்கப்பட்டன, மேலும், அதன் குணாதிசயங்களின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த, அடுத்த சில ஆண்டுகளுக்கு ஆதித்யா தாராப் இனப்பெருக்கத்தை கண்காணித்தார். இந்த இனத்தின் புதுமையை லண்டனின் கியூ தாவரவியல் பூங்காவைச் சேர்ந்த முன்னணி உலகளாவிய நிபுணர் டாக்டர் ஐ. டர்பிஷைர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த இனத்தை விவரிக்கும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை சமீபத்தில் மதிப்புமிக்க கியூ புல்லட்டின் இதழில் வெளியிடப்பட்டது.
டிக்லிப்டெரா பாலிமார்பா வடக்கு மேற்குத் தொடர்ச்சி மலையின் திறந்த புல்வெளிகளில், சரிவுகளில் செழித்து வளர்கிறது, இது கோடை வறட்சி மற்றும் அடிக்கடி மனிதனால் தூண்டப்பட்ட தீ போன்ற, தீவிர பருவநிலை நிலைமைகளுக்கு வெளிப்படும் பகுதி ஆகும். இது போன்ற கடுமையான நிலைமைகள் இருந்தபோதிலும், இனங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை உயிர்வாழவும் பூக்கவும் தகவமைந்துள்ளன. முதல் பூக்கும் கட்டம் பருவமழைக்கு பிறகு (நவம்பர் தொடக்கம்) மார்ச் அல்லது ஏப்ரல் வரை நிகழ்கிறது, அதே நேரத்தில், மே மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டாவது பூக்கும் கட்டம், தீயால் தூண்டப்படுகிறது. இந்த இரண்டாவது கட்டத்தின் போது, மர ஆணிவேர் குள்ள பூக்கும் தளிர்களை உருவாக்குகிறது, இது அதிக அளவில், ஆனால், குறுகிய பூக்கும் காலத்திற்கு வழிவகுக்கிறது.
டிக்லிப்டெரா பாலிமார்பாவின் கண்டுபிடிப்பு, முக்கியமான பாதுகாப்பு தாக்கங்களைக் கொண்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்த இனத்தின் தனித்துவமான தகவமைப்பு மற்றும் அதன் வரையறுக்கப்பட்ட வாழ்விட வரம்பு ஆகியவை, புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்புகளை கவனமாக நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. அடிக்கடி மனிதனால் தூண்டப்பட்ட தீ, இனங்களின் வாழ்க்கைச் சுழற்சியின் ஒரு பகுதியாக இருந்தாலும், அதன் உயிர்வாழ்வை அச்சுறுத்தும் வாழ்விட சீரழிவைத் தடுக்க சமப்படுத்தப்பட வேண்டும். அதிகப்படியான பயன்பாட்டிலிருந்து புல்வெளிகளை பாதுகாப்பது மற்றும் தீ மேலாண்மை நடைமுறைகள், பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிப்பதை உறுதி செய்வது, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனத்தைப் பாதுகாப்பதற்கான முக்கியமான படிகள் ஆகும்.
இந்த கண்டுபிடிப்பு மேற்குத் தொடர்ச்சி மலையின் நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது, இது தனித்துவமான தழுவல்களுடன் இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல உயிரினங்களைக் கொண்டுள்ளது.
*****
MM/KPG/DL
(Release ID: 2072491)
Visitor Counter : 37