தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
டிராய் ஆலோசனை அறிக்கை மீதான கருத்துகள் / எதிர் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி நீட்டிப்பு
Posted On:
11 NOV 2024 5:30PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தொலைத்தொடர்புச் சட்டம், 2023-ன் கீழ் வழங்கப்பட வேண்டிய நெட்வொர்க் அங்கீகாரங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த ஆலோசனை அறிக்கையை 22.10.2024 அன்று வெளியிட்டது. ஆலோசனை அறிக்கையில் பங்குதாரர்களிடமிருந்து எழுப்பப்பட்ட பிரச்சனைகள் குறித்து எழுத்துப்பூர்வ கருத்துக்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 12.11.2024 ஆகவும், எதிர் கருத்துகளுக்கு 19.11.2024 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு சில பங்குதாரர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிகளை முறையே 19.11.2024 மற்றும் 26.11.2024 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் / எதிர் கருத்துக்களை மின்னணு வடிவில், முன்னுரிமை advmn@trai.gov.in -ல் அனுப்பலாம். ஏதேனும் விளக்கம் / தகவலுக்கு, டிராய் ஆலோசகர் (நெட்வொர்க்ஸ், ஸ்பெக்ட்ரம் மற்றும் உரிமம்) திரு அகிலேஷ் குமார் திரிவேதியை +91-11-20907758 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
***
PKV/RR/DL
(Release ID: 2072485)
Visitor Counter : 32