அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஐஐடி ரோபர் காப்புரிமை பெற்ற இயந்திர முழங்கால் மறுவாழ்வு சாதனத்தை உருவாக்கியுள்ளது
Posted On:
11 NOV 2024 4:25PM by PIB Chennai
அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய முழங்கால் மறுவாழ்வுக்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ஐ.ஐ.டி ரோபரின் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ச்சியான செயலற்ற இயக்கம் (சிபிஎம்) சிகிச்சையை மிகவும் அணுகக்கூடியதாகவும் மலிவு விலையிலும் மாற்றுவதற்கான ஒரு புதுமையான தீர்வை வெளியிட்டுள்ளனர். ஐ.ஐ.டி ரோபரில் உள்ள குழு, முழங்கால் மறுவாழ்வுக்கான முழுமையான இயந்திர செயலற்ற இயக்க இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
விலை உயர்ந்த மற்றும் மின்சாரத்தைச் சார்ந்துள்ள பாரம்பரிய மோட்டார் பொருத்தப்பட்ட இயந்திரங்களைப் போலல்லாமல், புதிதாக உருவாக்கப்பட்ட சாதனம் முற்றிலும் மாறுபட்டது. இது ஒரு பிஸ்டன் மற்றும் கப்பி அமைப்பைப் பயன்படுத்துகிறது. இது பயனர் ஒரு கைப்பிடியை இழுக்கும்போது காற்றை சேமிக்கிறது. இது முழங்கால் மறுவாழ்வுக்கு உதவ மென்மையான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கத்தை செயல்படுத்துகிறது. இந்த எளிய ஆனால் பயனுள்ள வடிவமைப்பு மின்சாரம், பேட்டரிகள் அல்லது மோட்டார்களின் தேவையை நீக்குகிறது. இது இலகு ரக சிறிய சாதனமாக அமைந்துள்ளது.
இந்த இயந்திரம் விலையுயர்ந்த மின்சார இயந்திரங்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய மாற்றாக விளங்குகிறது. இது பெரும்பாலும் பல நோயாளிகளுக்கு, குறிப்பாக மின்சார விநியோகம் இல்லாத கிராமப்புறங்களில் அடைய முடியாதது. மின்சாரத்தை நம்பியிருப்பதைக் குறைப்பதன் மூலம், இது தொடர்ச்சியான செயலற்ற இயக்க சிகிச்சையை ஆஃப்-கிரிட் இடங்களில் கூட சாத்தியமாக்குகிறது.
கூடுதலாக, அதன் பெயர்வுத்திறன் நோயாளிகள் தங்கள் வீடுகளின் வசதியில் இதைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. நீண்டகால மருத்துவமனையில் தங்குதல் மற்றும் மறுவாழ்வு வருகைகளின் தேவையைக் குறைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2072411
***
(Release ID: 2072411)
PKV/RR/KR
(Release ID: 2072438)
Visitor Counter : 44