பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
சிறப்பு இயக்கம் 4.0: பணியாளர் நலத் துறையின் சாதனைகள்
Posted On:
11 NOV 2024 3:00PM by PIB Chennai
பணியாளர் நல அமைச்சகம், அதனுடன் இணைந்த துணை அமைப்புகளின் சிறப்பு இயக்கம் 4.0 தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. 2024 அக்டோபர் 02 தொடங்கி அக்டோபர் 31 வரை இந்த இயக்கம் நடைபெற்றது. இந்த காலகட்டத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 அக்டோபர் 19 அன்று அரசு ஊழியர்களின் தனிப்பட்ட, நிறுவன திறன்களை மேம்படுத்துவதற்காக 'கர்மயோகி சப்தா' – தேசிய கற்றல் வாரத்தையும் தொடங்கி வைத்தார்.
சிறப்பு இயக்கத்தில் துறையின் சாதனைகள்:
- நிலுவையில் உள்ள பணிகளை திறம்பட பணிகளை நிறைவு செய்து இலக்குகள் அடையப்பட்டுள்ளன.
- 48,469 காகித கோப்புகளும் 75,000 ஆவணங்களும், மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், 7,400-க்கும் மேற்பட்ட கோப்புகள் மீது பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 5,217 மின் கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 1,786 மின் கோப்புகள் மூடப்பட்டுள்ளன.
- அலுவலக கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலம் ரூ.1,29,847/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
- இணையதள விழிப்புணர்வு / பாதுகாப்பு குறித்த பயிலரங்கு துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு துறையின் செயலாளர் தலைமை தாங்கினார்.
- தகவல் அறியும் உரிமைச் சட்டம்- 2005 குறித்து இரண்டு சிறப்பு தகவல் பயிலரங்குகள் நடத்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2072371
***
PLM/RS/KR
(Release ID: 2072388)
Visitor Counter : 24