பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        திரு மகேந்திர சிங் மேவாட் மறைவிற்கு  பிரதமர் இரங்கல்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                10 NOV 2024 10:38PM by PIB Chennai
                
                
                
                
                
                
                சித்தோர்கர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு மகேந்திர சிங் மேவாட்டின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: 
 
“சமூக மற்றும் அரசியல் வாழ்வில் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய சித்தோர்கரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மேவார் அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான திரு மகேந்திர சிங் மேவாரின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. ராஜஸ்தானின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், மேன்மைப்படுத்துவதிலும் அவர் தனது வாழ்நாளை செலவிட்டார். மக்களுக்கு சேவை செய்ய முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். சமூக நலனுக்கான அவரது பணி எப்போதும் உத்வேகம் அளிக்கும். இந்தத் துயர நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!”!" 
BR/KR
                                                                              ***
                
                
                
                
                
                (Release ID: 2072261)
                Visitor Counter : 72
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam