பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2024 4:13PM by PIB Chennai
மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தலுக்காக நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (டிஎல்சி) பிரச்சாரம் 3.0 ஐ அறிமுகப்படுத்தியது. ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தலுக்கான பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையே ஜீவன் பிரமான் ஆகும். இந்தப் பிரச்சாரம் 3.0 நவம்பர் 1 முதல் 30 வரை, இந்தியாவின் 800 நகரங்களில் நடைபெறும், இதில் மத்திய / மாநில அரசுகள் / இபிஎப்ஓ / தன்னாட்சி அமைப்புகளின் அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் அல்லது ஐபிபிபி-யில் சமர்ப்பிக்கலாம். முதிய ஓய்வூதியதாரர்கள் தங்கள் வீட்டிலிருந்தே இச்சேவையை மேற்கொள்ளலாம். அனைத்து ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், சிஜிடிஏ, ஐபிபிபி, யுஐடிஏஐ ஆகியவை இணைந்து இந்தப் பிரச்சாரத்தை நாடு தழுவிய அடிப்படையில் செயல்படுத்தும்.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சி.ஜி.டி.ஏ-வுடன் (பாதுகாப்பு அமைச்சகம்) ஒருங்கிணைந்து ஹைதராபாத்தில் டி.எல்.சி மெகா முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியங்கள் துறை செயலாளர் திரு வி.சீனிவாஸ் தலைமையில் சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் குழு ஒன்று 2024 நவம்பர் 12 அன்று ஹைதராபாத் சென்று பிரச்சார முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும், பாதுகாப்பு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஓய்வூதியதாரர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள், ஓய்வூதியதாரர்கள் சங்கம் (ஹைதராபாத், தெலுங்கானா), இஸ்ரோ ஓய்வு பெற்ற ஊழியர்கள் மன்றம் (ஐஆர்இஎஃப்) (ஹைதராபாத், தெலுங்கானா) அகில இந்திய ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் சம்மேளனம் (செகந்திராபாத்) ஆகியோர் இதில் கலந்து கொள்வார்கள். இந்த மெகா முகாம்களில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தைச் சேர்ந்த ஒரு குழு கலந்து கொண்டு, ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் ஆவணங்களை தேவைப்படும் இடங்களில் புதுப்பித்துக் கொள்ளவும், தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்யவும் உதவும்.
தற்போதைய பிரச்சாரம், டிஎல்சி சமர்ப்பித்தலுக்கு முக சரிபார்ப்பைப் பயன்படுத்தும் நுட்பம் தொலைதூரப் பகுதிகளில் உள்ள ஓய்வூதியதாரர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியாகும், இதன் மூலம் அவர்கள் தங்கள் வீடுகளில் வசதியாக இருந்தபடியே நுட்பத்தைப் புரிந்துகொண்டு பயன்படுத்த முடியும். டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், ஓய்வூதியதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஆயுள் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கலாம். இது ஓய்வூதியம் பெறுவோரின், குறிப்பாக முதியோர், நலிவடைந்த மற்றும் ஊனமுற்ற ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கிய மிகப்பெரிய படியாகும்.
இந்த இயக்கத்தை நாடு முழுவதும் வெற்றிகரமாக நடத்த ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
*****
PKV/KV