பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
சிறப்பு இயக்கம் 4.0 வெற்றிகரமாக நிறைவடைந்தது - இந்த ஆண்டு ரூ. 650 கோடி வருவாய் ஈட்டப்பட்டது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
09 NOV 2024 4:15PM by PIB Chennai
சிறப்பு இயக்கம் 4.0, 31 அக்டோபர் 2024 வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மத்திய பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார். தூய்மையை நிறுவனமயமாக்குதல், மத்திய அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள பணிகளை குறைப்பது ஆகிய நோக்கங்களுடன் மிகப்பெரிய இயக்கமாக இது நடத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
5.97 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களை உள்ளடக்கியதாக இந்த இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. 2021-24-ம் ஆண்டு முதல் அரசு நடத்திய சிறப்பு இயக்கங்களின் மூலம் பழைய பொருட்களை அகற்றுவதன் மூலம் ரூ.2,364 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. சிறப்பு இயக்கம் 4.0, 2024 அக்டோபர் 2-31, காலகட்டத்தில் ரூ .650 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டது.
இதில் 190 லட்சம் சதுர அடி இடம் அலுவலக பயன்பாட்டிற்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு இயக்கம் 4.0 தினசரி அடிப்படையில் ஒரு https://scdpm.nic.in/SpecialCampaign4 என்ற பிரத்தியேகத் தளத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டது.
45.10 லட்சம் பதிவேடுகள் மேலாண்மை செய்யப்பட்டுள்ளது. 5.55 லட்சம் பொதுமக்கள் குறைகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு நடவடக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு இயக்கம் 4.0, 2024 அக்டோபர் 31 , அன்று சிறந்த முடிவுகளுடன் நிறைவடைந்தது. அனைத்து தரவுகளையும் தொகுத்த பிறகு, மதிப்பீட்டு கட்டம் 2024 நவம்பர் 14 முதல் தொடங்கும்.
*****
PLM/KV
(Release ID: 2072024)
Visitor Counter : 30