நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்திய உணவுக் கழகம் 'தூய்மையே சேவை 2024' இயக்கத்தை 'தூய்மைப் பழக்கம், தூய்மைக் கலாச்சாரம்' மீது கவனம் செலுத்தி நிறைவு செய்தது
Posted On:
09 NOV 2024 1:16PM by PIB Chennai
இந்திய உணவுக் கழகம் "தூய்மை இந்தியா தின" கொண்டாட்டத்துடன் "தூய்மையே சேவை 2024" இயக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி தலைமையகம் மற்றும் அதன் சார்நிலை அலுவலகங்களின் நிறைவு விழாவில் இத்துறை அவருக்கு மரியாதை செலுத்தியது.
இந்திய உணவுக் கழகம் இந்த இயக்கத்தை ஜம்மு காஷ்மீர் முதல் கேரளா வரை (வடக்கு முதல் தெற்கு) குஜராத் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை (மேற்கு முதல் கிழக்கு) 2024, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நாடு முழுவதும் 760 இடங்களில் அனைத்து இந்திய உணவுக் கழக அலுவலகங்கள், மண்டல / பிராந்திய / பிரிவு மற்றும் தொலைதூர பகுதிகளை உள்ளடக்கிய கிடங்குகளில் நடத்தியுள்ளது. தூய்மையின் கீழ்க்காணும் மூன்று முக்கிய தூண்களை மையமாகக் கொண்டு விரிவான தூய்மை இயக்கத்தை இக்கழகம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் 'ஒட்டுமொத்த சமுதாயம்' என்ற அணுகுமுறையை வலியுறுத்தி, பல்வேறு தூய்மை நடவடிக்கைகள், பள்ளிகளில் விழிப்புணர்வு முகாம்கள், குடிமக்களை மையமாகக் கொண்ட முன்முயற்சிகள் ஆகியவை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டன.
எஃப்.சி.ஐ ஊழியர்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளூர் நகராட்சி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பெரிய தூய்மை இயக்கங்களை மேற்கொண்டனர், அவை கழிவுப்பொருட்கள் மற்றும் குப்பை கொட்டும் இடங்களை சிறந்த, புத்துயிர் பெற்ற தோற்றத்துடன் மாற்றியமைத்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2071964
**** *****
SMB/KV
(Release ID: 2072021)
Visitor Counter : 19