நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
சிறப்பு இயக்கம் 4.0-வில் இந்திய உணவுக் கழகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள்
Posted On:
09 NOV 2024 1:26PM by PIB Chennai
இந்திய உணவுக் கழகம் அதன் அலுவலகங்களிலும் கிடங்குகளிலும் தூய்மையை மேம்படுத்துவதற்கும், நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், பணியிட இட அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் 2024 செப்டம்பர் 16 அன்று தொடங்கப்பட்ட சிறப்பு இயக்கம் 4.0-வை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த நாடு தழுவிய இயக்கத்தில், மண்டல, பிராந்திய, கோட்ட மட்டங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அலுவலகங்களிலிருந்தும், இந்திய உணவுக் கழக கிடங்குகளிலிருந்தும் விரிவான பங்கேற்பு காணப்பட்டது.
சிறப்பு பிரச்சாரம் 4.0-ன் முக்கிய சிறப்பம்சங்கள்:
*மொத்தம் 102,253 காகிதக் கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன.
*38,207 மின்-கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு 5,000 மின்-கோப்புகள் மீதான பணிகள் முடிக்கப்பட்டன.
பல்வேறு இந்திய உணவுக் கழக இடங்களில் மொத்தம் 858 தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டன.
கழிவிகளை அகற்றுவதன் மூலமும், 19,743 சதுர அடி அலுவலக இடத்தை விடுவித்து ரூ.1,71,722 வருவாய் ஈட்டப்பட்டது.
சிறப்பு இயக்கம் 4.0 முடிவடையும் போது, இந்திய உணவுக் கழகமான எஃப்.சி.ஐ, சுத்தமான, பசுமையான, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பணியிடச் சூழலை மீண்டும் உறுதிப்படுத்தியது.
*****
PLM/KV
(Release ID: 2072013)
Visitor Counter : 21