சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
ஹஜ் யாத்திரையில் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையையும் சமத்துவத்தையும் மேம்படுத்துதல்
Posted On:
09 NOV 2024 11:33AM by PIB Chennai
அறிமுகம்
இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றான ஹஜ், முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது மேற்கொள்ள விரும்பும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கான ஒரு புனித யாத்திரை ஆகும். ஒவ்வொரு ஆண்டும், கோடிக் கணக்கானவர்கள் மக்காவில் கூடுகிறார்கள்.
ஹஜ் பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த இந்திய அரசு, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட தனிநபர்களுக்கு புனித யாத்திரையை எளிதாக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. குறிப்பாக தனித்துவமான சவால்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கு பயணத்தை மேம்படுத்துவதற்காக ஆதரவும் வசதித. திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய சீர்திருத்தங்களும் கொள்கை மேம்பாடுகளும் ஹஜ் அனுபவத்தை மேலும் வளப்படுத்தியுள்ளன. அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை ஊக்குவித்துள்ளதுடன் முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு பிரிவுகள் இந்த ஆழமான ஆன்மீக பயணத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன.
மும்பை நகரம் ஹஜ் நகரத்துடன் நீண்டகால தொடர்பைக் கொண்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இஸ்லாமியர்கள் இந்தத் துறைமுகத்திலிருந்து கடல் பாதை வழியாக தங்கள் புனிதப் பயணத்தை மேற்கொள்கின்றனர். பம்பாய் ஹஜ் கமிட்டி 1927-ம் ஆண்டில் நிறுவப்பட்டது.
பயண முறைகளின் பரிணாமம்
1994 வரை, சுமார் 5,000 யாத்ரீகர்கள் மும்பையிலிருந்து கப்பலில் பயணம் செய்தனர். சுமார் 20,000 பேர் விமானத்தில் பயணம் செய்தனர். இருப்பினும், 1995-ம் ஆண்டில், ஹஜ் யாத்ரீகர்களுக்கான கடல் பயணம் நிறுத்தப்பட்டது. அனைத்து யாத்ரீகர்களும் பின்னர் விமானத்தில் பயணம் செய்தனர். இதன் விளைவாக, கூடுதல் பயண முனையங்கள் நிறுவப்பட்டன. இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது.
ஹஜ் மேலாண்மையை பல்வகைப்படுத்துதல்:
இந்திய ஹஜ் குழுவில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்யும் ஹஜ் கமிட்டி சட்டம் 2002 இயற்றப்பட்டது.
ஹஜ் யாத்ரீகர்கள் மீது அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்யும் நோக்கில், ஹஜ் தொடர்பான அனைத்து விஷயங்களுக்குமான பொறுப்பு 2016 அக்டோபர் 1 அன்று வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து, சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது. இது இஸ்லாமிய யாத்ரீகர்களுக்கு ஆதரவளிப்பதற்கான அரசின் தற்போதைய உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
இந்திய ஹஜ் குழுவின் செயல்பாடுகள்:
மத்திய ஹஜ் குழு (CHC) என்று பொதுவாக அழைக்கப்படும் இந்திய ஹஜ் குழு, முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரைக்காக புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்கும், அது தொடர்பான இதர பணிகளை மேற்கொள்வதற்கும் ஹஜ் குழு சட்டம் 2002-ன் கீழ் அரசால் நிறுவப்பட்டுள்ளது.
இக்குழு அரசின் நிர்வாகக் கண்காணிப்பின் கீழ் கீழ்க்கண்ட முக்கிய பணிகளை நிறைவேற்றி வருகிறது:-
வருடாந்திர மாநாடு: ஹஜ் ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்யவும், ஹஜ் செயல் திட்டத்தை இறுதி செய்யவும் அகில இந்திய வருடாந்திர மாநாட்டை ஏற்பாடு செய்கிறது.
பொது அறிவிப்புகள்: செய்தித்தாள்கள் மூலம் ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்கும் அறிவிப்புகளை வெளியிடுதல், வைப்புத் தொகைகள், தங்குமிட விருப்பங்கள், காலக்கெடு ஆகியவற்றை விவரிக்கிறது.
விண்ணப்ப விநியோகம்: விண்ணப்ப படிவங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
இட ஒதுக்கீடு: முஸ்லிம் மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஹஜ் ஒதுக்கீடு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதிகப்படியான விண்ணப்பங்கள் குலுக்கல் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.
தரவு செயலாக்கம்: தங்குமிடங்கள் மற்றும் விமானங்களை நிர்வகிப்பதற்கான தரவுகளை அனுப்புகிறது.
பாஸ்போர்ட் - விசா: புது தில்லியில் உள்ள சவுதி தூதரகம் மற்றும் மும்பையில் உள்ள துணைத் தூதரகத்தில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதுடன், விசா ஒப்புதலுக்காக சவுதி அரேபிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கிறது.
தரவு தொகுப்பு: ஹஜ் ஏற்பாடுகளுக்காக பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்புவதற்கு முன்பு தரவை தொகுத்து சரிபார்க்கிறது.
நிதி சேகரிப்பு: தங்குமிடத் தேர்வின் அடிப்படையில் நிதியைச் சேகரித்து, அவற்றை வாடகை மற்றும் நிலுவைத் தொகைகளுக்குப் பயன்படுத்தி, மீதமுள்ள தொகையை சவூதி ரியால்களில் உள்ள யாத்ரீகர்களுக்கு அன்றாட செலவுகளுக்காக வழங்குகிறது.
அந்நிய செலாவணி விகித நிர்ணயம்: ரியால் மாற்று விகிதத்தை ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் நிர்ணயித்து ஹஜ் பருவத்திற்கு இறுதி செய்கிறது.
விமான கட்டண வசூல்: விமான கட்டண விகிதங்களை அறிவிக்கிறது. யாத்ரீகர்கள் வங்கி மூலம் பணம் செலுத்துகிறார்கள்.
விமான திட்டமிடல்: புறப்படும் தேதிகளை யாத்ரீகர்களுக்கு அறிவித்தல் மற்றும் தேவைகள் குறித்து ஆலோசனை வழங்குதல்.
எம்பார்கேஷன் ஆதரவு: 21 எம்பார்கேஷன் புள்ளிகளில் இருந்து செயல்படுத்தி, முகாம் அலுவலகங்களை வழங்குகிறது மற்றும் முன்பதிவு, பணம் அனுப்புதல் சரிபார்ப்பு மற்றும் பயண ஆவணங்களுக்கு உதவுகிறது.
தடுப்பூசி ஏற்பாடுகள்: அனைத்து பயணிகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது மற்றும் தடுப்பூசி சான்றளிக்கிறது.
ஹஜ் வழிகாட்டியின் விநியோகம்: ஹஜ் சடங்குகள், தளவாடங்கள் மற்றும் சவூதி விதிமுறைகள் பற்றிய விரிவான வழிகாட்டியை பல மொழிகளில் வழங்குகிறது.
பயிற்சி திட்டங்கள்: தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்களின் யாத்ரீகர்கள் உட்பட பயணத்திற்கு யாத்ரீகர்களை தயார்படுத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்களுடன் புத்தாக்க முகாம்களை நடத்துகிறது.
விபத்து காப்பீடு: யாத்ரீகர்களுக்கு ஒரு முறை பிரீமியம் செலுத்தி குழு விபத்து இழப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துகிறது.
மதீனா தங்குமிடம்: மதீனாவில் ஒரே மாதிரியான தங்குமிடத்தை ஏற்பாடு செய்கிறது.
விமான போக்குவரத்து: 1995-ம் ஆண்டில் கப்பல் பயணங்கள் நிறுத்தப்பட்ட பின்னர் ஏர் இந்தியா மற்றும் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் மூலம் யாத்ரீகர்களுக்கான விமான பயண ஏற்பாடுகளை நிர்வகிக்கிறது.
எளிதான ஹஜ் பயணத்திற்கான முயற்சிகள்:
ஹஜ் பயணத்தை எளிதானதாக மாற்ற அரசாங்கம் பல சீர்திருத்தங்களை செயல்படுத்தியுள்ளது. சிறந்த அணுகல் மற்றும் வசதிக்காக டிஜிட்டல் உள்கட்டமைப்பை கணிசமாக மேம்படுத்துகிறது. இந்த முயற்சிகள் பெண்களின் சமத்துவத்தை ஊக்குவிக்கின்றன. மேலும் அதிகமான பெண்கள் யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கிறது.
ஹஜ் யாத்ரீகர்களுக்கான உதவி மையங்கள்:
வெளிநாடுகளில் உள்ள யாத்ரீகர்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க இந்திய தூதரகங்களுக்குள் வலுவான
மையங்களை அரசு நிறுவியுள்ளது. தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு வகைகள் மூலம் யாத்ரீகர்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு இந்த மையங்கள் உடனடியாக செயலாற்றி நடவடிக்கை எடுக்கின்றன.
இந்திய ஹஜ் கமிட்டி மற்றும் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் முன்முயற்சிகளால் ஹஜ் யாத்திரை கணிசமாக மேம்பட்டுள்ளது. யாத்ரீகர்களின் நலனுக்கான வலுவான அர்ப்பணிப்பையும், இந்தியாவில் கலாச்சார மற்றும் மத பன்முகத்தன்மையை மேம்படுத்துவதையும் பிரதிபலிக்கும் யாத்திரை இன்னும் சிறப்பானதாக மாறத் தயாராக உள்ளது.
*****
PLM/KV
(Release ID: 2071996)
Visitor Counter : 40